ரிச்மாண்டில் பிரபல இசைக்கலைஞர்கள் தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரிச்மாண்டில் பிரபல இசைக்கலைஞர்கள் தினம்

நவம்பர் 16,2019  IST

Comments

ரிச்மாண்ட்: அமெரிக்கா, ரிச்மாண்டில் பிரபல இசைக் கலைஞர்கள் தினம் கொண்டாடப்பட்டது.

ரிச்மாண்டில் தமிழ்ச் சமுதாயத்தைச் சேர்ந்த பெற்றோர்கள், தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் மற்றும் இந்திய கலாச்சாரத்தை, பாரம்பரியத்தைக் கற்றுத்தருவதில் மிகுந்த அக்கறை காட்டுகின்றனர். இதில் ஒன்றாக குழந்தைகளுக்கு கர்னாடக இசை கற்றுத்தருவது பிரபலமாகி வருகிறது. ரவீந்திரன் நரசிம்மன், சித்ரா ரவீந்திரன், நாராயணன் சுப்பிரமணியன், மீனா சங்கரன், ஷியாமளா நரசிம்மன் போன்ற இசை ஆசிரியர்கள், குழந்தைகளுக்கு இசை கற்றுத் தருவதில் மிகுந்த நேரத்தைச் செலவழித்து வருகின்றனர்.


ரிச்மாண்ட் ரசிகாஸ் என்ற இசை ஆர்வலர் அமைப்பு, இசை குறித்த விழிப்புணர்வைப் பரப்பும் வகையில் இசை நிகழச்சிகளுக்கு ஏற்பாடு செய்து வருகிறது. உள்ளூர் கர்னாடக இசைக் கலைஞர்களை ஊக்கவிக்கவும் அவர்களுடைய திறமையை வளர்க்கவும் ஆண்டுதோறும் “ தியாகராஜர் உத்சவம் “, “ பிரபல இசைக்கலைஞர்கள் தினம் “ என்ற இரு முக்கிய நிகழ்ச்சிகளை இந்த அமைப்பு நடத்தி வருகிறது. இசையில் ஆர்வமுள்ளவர்கள் தனியாகவோ, குழுவாகவோ மேடை ஏறி பாடலாம்.

இந்த ஆண்டும் “ பிரபல இசைக்கலைஞர்கள் தினம் “ மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்ட்டது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில், முத்துசுவாமி தீட்சிதர், ஷியமா சாஸ்திரிகள், பாபநாசம் சிவன் போன்றவர்கள் இயற்றிய பாடல்களைக் குழந்தைகளும் பெரியவர்களும் பாடினர். நூற்றுக்கும் மேற்பட்ட பாடகர்கள பங்கேற்கும் வகையில் இந்த நிகழ்வு மிகவும் பிரபலமாகி உள்ளது.

நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கும், ஆதரவளித்த குருமார்களுக்கும் அமைப்பாளர்கள் நன்றி தெரிவித்தனர்.

- ரிச்மாண்டிலிருந்து நடராஜ மூர்த்தி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us