இந்தோனேசியத் தமிழ்ச்சங்க '8ம் ஆண்டு விழா' | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இந்தோனேசியத் தமிழ்ச்சங்க '8ம் ஆண்டு விழா'

நவம்பர் 18,2019  IST

Comments

இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவில் '8ம் ஆண்டு விழா' நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். நிகழ்ச்சியில் 350க்கும் மேற்பட்ட தமிழ்ச்சங்க உறுப்பினர்களும் அவர்களின் குடும்பத்தினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்திய தூதரக அதிகாரிகள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திரைப்பட நடிகர் ஜோ மல்லூரியின் தமிழ் சொற்பொழிவும், அதனைத் தொடர்ந்து தமிழ்ச்சங்க உறுப்பினர்கள் மற்றும் ஜோ மல்லூரி அவர்களுக்கும் இடையே கேள்வி/பதில் உரையாடல்நடைபெற்றது. அடுத்ததாக டிவி புகழ் பல குரல் மன்னர்கள்அசார், TSK  மற்றும் பழைய ஜோக் தங்கதுரை இவர்களின் கலக்கலான நகைச்சுவை நிகழ்ச்சியும் நடைபெற்றது.


Ventriloquism என்றழைக்கப்படும் மாயக்குரல் புகழ் நிக்கி நிரஞ்சனா அவர்களின் நிகழ்ச்சி பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. நிகழ்ச்சியின் நடுவில் இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் 8ம் ஆண்டு சிறப்பு மலர் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு இந்தோனேசியத் தமிழ்ச்சங்க நிர்வாக உறுப்பினர் திரு. சத்யா வரவேற்புரை வழங்கினார். தமிழ்ச்சங்கத்தின் தலைவர் திரு. ரமேஷ் ஆண்டறிக்கை வழங்கினார். தமிழ்ச்சங்க நிர்வாகிகள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்டோர் அனைவருக்கும் இந்தோனேசியத் தமிழ்ச்சங்கத்தின் துணைத்தலைவர் திரு.சந்திரசேகரன் நன்றி தெரிவித்தார்.!

- தினமலர் வாசகர் ரமேஷ்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us