சிங்கப்பூரில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கார்த்திகை சோமவார சங்காபிஷேகம்

நவம்பர் 19,2019  IST

Comments

சிங்கப்பூர் சிவாலயங்களில் கார்த்திகை சோம வார பூஜைகள் விசேஷமாக நடைபெறுவது வழக்கம். மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணா ஆலயத்தில் கார்த்திகை முதல் சோம வார வழிபாடு வெகு விமரிசையாக நடைபெற்றது. 108 சங்குகள் – கலசம் வைத்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று ஸ்ரீ விசாலாட்சி அம்பிகா உடனுறை ஸ்ரீ விஸ்வநாத சுவாமிக்கு சங்காபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித கலசம் சிவாச்சார்யார்களால் ஆலயம் வலம் வரப்பெற்றன.

பின்னர் சங்காபிஷேகமும் கலசாபிஷேகமம் நடைபெற்றன. சங்காபிஷேகம் நடைபெற்ற போது பக்தர்கள் “ தென்னாடுடைய சிவனே போற்றி – எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி “ என்று உருக்கத்தோடு முழக்கமிட்டனர். பின்னர் சர்வ அலங்கார நாயகராகக் காட்சியளித்த ஸ்ரீ விஸ்வநாத சுவாமிக்குத் தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் மகா தீபாராதனை நடத்தினார். பெருந் திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு சிவனருள் பெற்றனர் ஆலய நிர்வாகத்தினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். கலந்து கொண்ட எல்லோருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us