சிங்கப்பூரில் பைரவாஷ்டமி வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் பைரவாஷ்டமி வழிபாடு

நவம்பர் 20,2019  IST

Comments

சிங்கப்பூர் மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் ஸ்ரீ பைரவாஷ்டமி விழிபாடு வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. யாகசாலையில் சிறப்பு ஹோமம் நடைபெற்று புனித கலசம் சிவாச்சார்யாரால் ஆலயம் வலம் வரப் பெற்று கலசாபிஷேகம் செய்யப்பட்டது. பக்தப் பெருமக்கள் நேர்த்திக் கடன் செலுத்திய குடம் குடமான பாலாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பைரவருக்கு பக்தர்கள் பலர் வடை மாலை சாற்றினர். சர்வ அலங்கார நாயகராக எழுந்தருளி அருள்பாலித்த பைரவருக்கு மகா தீபாராதனை நடைபெற்றபோது ஸ்ரீ பைரவருக்கு ஜே என பக்தர்கள் முழக்கமிட்டனர்.

தலைமை அர்ச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் பால பைரவர் அஷ்டகத்தை உருக்கத்தோடு பாடியது மெய் சிலிர்க்க வைத்தது. பெருந் திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு ஸ்ரீ பைரவர் அருள் பெற்றுச் சென்றனர். ஆலய மேலாண்மைக் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)