சிங்கப்பூரில் ‘ஊடறு’ அனைத்துலக பெண்கள் மாநாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ‘ஊடறு’ அனைத்துலக பெண்கள் மாநாடு

நவம்பர் 20,2019  IST

Comments

உலகளாவிய தமிழ்ப் பெண்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், வாழ்வியல் நெருக்கடிகள், ஆகியவற்றின் ஆழ அகலங்களை ஊடறுத்து, அவற்றைக் குறித்து ஆரோக்கியமான கலந்துரையாடல்களை நடத்த ஏதுவான தளமாக ‘ஊடறு’ அனைத்துலக பெண்கள் மாநாடு 2005 ஆம் ஆண்டில் சுவிட்சர்லாந்தில் தொடங்கப்பட்டது. பதினைந்து ஆண்டுகளில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்டு வந்த ஊடறு 2019ல் சிங்கப்பூரில் முதன்முறையாக நவம்பர் 2 மற்றும் 3ம் தேதிகளில் நடைபெற்றது. மாநாட்டில் இந்தியா, இலங்கை, நியுசிலாந்து, மலேசியா, சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து 15 பெண் பேராளர்களும், சிங்கப்பூரைச் சேர்ந்த 15 பெண் பேராளர்களும் கலந்துகொண்டனர்.

இதுவரை நடைபெற்றுள்ள மாநாடுகளிலேயே, வெளிநாட்டுப் பேராளர்களின் எண்ணிக்கைக்கு இணையான அளவில், உள்ளூர் பேராளர்கள் கலந்துகொண்டதும், அதிகளவில் இளையர்கள் பேராளர்களாக கலந்துகொண்டு கட்டுரைப் படைத்ததும் இதுவே முதல் முறை. இம்மாநாட்டை சிங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் திருமதி ரமா சுரேஷும் பல்கலைக்கழக மாணவி செல்வி அஷ்வினி செல்வராஜூம் எடுத்து நடத்தினர்.

கலை, கல்வி, மேடை நாடகம், ஊடகம், விளையாட்டு, சமூக சேவை, வரலாறு, சட்டத்துறை, சிறப்புத் தேவைகளை உடைய குழந்தைகளின் வாழ்வியல், சமூக நல்லிணக்கம், தொழில்முனைப்பு, பெண்களின் ஆரோக்கியம் என்று பல்வேறு தலைப்புகளை ஒட்டி சிங்கையின் பெண் பேராளர்கள் கட்டுரைகளைப் படைத்தனர். ஒவ்வொரு அமர்வுக்குப் பின்னரும் இடம்பெற்ற கேள்வி பதில் அங்கத்தில், பார்வையாளர்கள் படைக்கப்பட்ட கட்டுரைகளைக் குறித்த தங்களுடைய கேள்விகளையும் முன்வைத்தனர். இரண்டு நாள் மாநாட்டிற்கு நிகழ்ச்சி நெறியாளர்களாக விளங்கினர் அகிலா ஹரிஹரன் மற்றும் வீர விஜயபாரதி.

முதல் நாள் பெண்கள் மட்டுமே கலந்துகொள்ள இயலும் என்றாலும், இரண்டாம் நாள் அனைவரும் கலந்துகொள்ளும்படியாக வகைசெய்யப்பட்டிருந்தது. மாநாட்டின் முதல் நாளுக்கு லிஷா பெண்கள் பிரிவின் தலைவரான திருமதி ஜாய்ஸ் கிங்ஸ்லி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாநாட்டைத் துவக்கி வைத்தார். பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் சமூக உயர்வுக்காகவும் உழைத்துவரும் அரசு சாரா அமைப்பான அஙிஅகீஉ எனும் இயக்கத்திற்கு முன்னாள் தலைவராக செயலாற்றிய திருவாட்டி கான்ஸ்டன்ஸ் சிங்கம் மாநாட்டின் இரண்டாம் நாளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘சிங்கையின் இந்திய பெண்கள்’ என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றியதோடு, பேராளர்களுக்கும் நிதி ஆதரவாளர்களுக்கும் நினைவுப் பரிசையும் வழங்கினார்.

இரண்டு நாட்களுமே நடைபெற்ற புகைப்பட கண்காட்சியில் தன்னுடைய புகைப்படங்களைக் காட்சிக்கு வைத்திருந்தார் மலேசியாவைச் சேர்ந்த ஊடகவியலாளர் யோகி பெரியசாமி. அவருடைய புகைப்படக் கண்காட்சியை முதல் நாளன்று திறந்து வைத்து, அது குறித்த அறிமுகவுரையை அளித்தார் பாபுவா நியு கினியைச் சேர்ந்த திருமதி சுபா அபர்ணா.

மாநாட்டின் இரண்டாம் நாளின் போது, ‘ஊடறு’ றஞ்சியும் புதியமாதவியும் தொகுத்த 33 பெண்களின் நேர்காணல்கள் அடங்கிய ‘சங்கமி – பெண்ணிய உரையாடல்கள்’ எனும் நூல் யுனிவர்செல் நிறுவனத்தின் இயக்குனரான திருமதி ஜீவிதாவால் வெளியிடப்பட்டது. மாநாட்டிற்கு இட ஆதரவை வழங்கியிருந்தது தேசிய நூலகம்; இணை ஏற்பாட்டாளராக செயல்பட்டது தமிழவேள் நற்பணி மன்றம்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)