உலக நீரிழிவு தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

உலக நீரிழிவு தினம்

நவம்பர் 21,2019  IST

Comments

உலகமெங்கும் நவம்பர் 14 ஆம் தேதி சர்க்கரைநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. ஏனெனில் இன்சுலினை கண்டுபிடித்த ஃபிரடெரிக் பாண்டிங்' என்ற விஞ்ஞானியின் பிறந்த நாளான நவம்பர் 14-ஆம் தேதி “உலக நீரிழிவு நோய்” தினமாக 1991-ம் ஆண்டு முதல் உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி, கடைபிடித்து வருகிறது.

சான் அன்டோனியோவில் உள்ள சர்ஸாமோரா தெருவில் இருக்கும் டெக்சாஸ் டயாபடீஸ் இன்ஸ்டிடியூட், மாலை 3 மணியிலிருந்து ஐந்தரை மணிவரைலான முகாம் ஒன்று நடத்தியது. பல இடங்களில் நீலவிளக்குகள் ஒளிரச் செய்து நீரிழிவு நாளை மக்கள் மனதில் கொண்டு வந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு பெரும் பிரச்சனையாகவும்,ஆபத்தாகவும் உள்ள நோய் நீரிழிவு நோய் எனப்படும் சர்க்கரை நோய். அதனைப் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்படுவதற்குத் தான் இத்தினத்தை பலரும் அறியும்படி உலகமெங்கும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் ஏதேனும் ஒரு கருப்பொருளை மையமாகக் கொண்டு அனுசரிக்கப்படுவது வழக்கம். இவ்வருடத்தின் கருப்பொருள்- 'சர்க்கரை நோயும்,குடும்பத்தினர் மீதான அக்கறையும்'

சென்னை-இராயபுரத்தின் புகழ் பெற்ற 'எம்.வி. நீரிழிவு மருத்துவமனை மற்றும் பேராசிரியர் எம். விஸ்வநாதன் நீரிழிவு ஆராய்ச்சி மையம்’, கடந்த பத்து வருடங்களாக நீலநிற விளக்குகள் ஒளிரச் செய்து இத்தினத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக, நீரிழிவு நோய் வராமல் தடுக்கும் வகை அறியவும், சர்க்கரை நோய் உள்ளோர் கவனத்திற்கும் கொண்டு செல்லவும் முயற்சி எடுத்து நடத்துவர்.

இவ்வருடம் தங்கள் மருத்துவமனைகள் உள்ள இடங்கள் மட்டுமல்லாமல் ,13 ஆம் தேதி இரவு சென்னை வள்ளுவர் கோட்டம் முழுவதும் நீல நிற விளக்குகள் ஒளிர அற்புதமாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். இவ்விழாவிற்கு தமிழ் அதிகாரப்பூர்வ மொழி, தமிழ் கலாச்சாரம் மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் திரு.மா ஃபா.பாண்டியராஜன் வந்திருந்து சிறப்பித்தார்.

இவ்வருடம் இவர்கள் -'தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தின் தனித்துவம்' எனும் கருத்தை அடிப்படையாகக் கொண்டு பேச்சுப்போட்டிகளும் பட்டிமன்றமும் நடத்தினர்.

இத்தலைப்பில் கல்லூரி மாணவர்கள் பேச்சுப்போட்டியில் கலந்துகொண்டனர். முதல் பரிசு: ரூ. 10000 -திருச்சியின் ஹோலிகிராஸிலிருந்து திரு கோகுல் கே.பெற்றார்.

இரண்டாவது பரிசு: 7500 / - - வெள்ளிப் பதக்கம் அஜ்மல் டிரேடர்ஸ் மேலாளரும் திருச்சியிலிருந்து ஊக்கமளிக்கும் பேச்சாளருமான திரு. எஸ். ஷேக் அலிமாஸ் அலி பெற்றார்.

மூன்றாம் பரிசு: ரூ. 5000 / - மற்றும் வெண்கலப் பதக்கம் மதுரை தியாகராஜர் கல்லூரியில் திரு. பாலு ஆனந்திற்கு வழங்கப்பட்டது.

பின்பு பட்டிமண்டபம்- 'இன்றைய பிஸியான அட்டவணையில் ஆரோக்கியமான வாழ்க்கை முறை சாத்தியமா என்பது'. சொல்வேந்தர் திரு சுகி சிவம், திரு மோகனசுந்தரம், திருமதி சியாமளா கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)