இயலாமை கற்றல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இயலாமை கற்றல்

நவம்பர் 27,2019  IST

Comments

 

நாம் பிறந்தது முதல் பலவற்றை கற்கின்றோம் பேச, எழுத, நடக்க, சிரிக்க, உணவு அருந்த, சிந்திக்க, செயல் பட, என பற்பல விஷயங்களை நம் அன்றாட வாழ்கையில் கற்றுகொள்கிறோம், அதைப்போல சில தேவையற்ற பாதகமான விஷயங்களையும் கற்றுகொள்கிறோம். நீங்கள் தினசரி வாழ்கையில் சந்திக்கும் சிலர் எதை எடுத்தாலும் எனக்கு தெரியாது, எனக்கு செய்ய தெரியாது, என்னால் முடியாது, நான் திறமை படைத்தவன் அல்ல, என்று கூறுவர். ஏன் இவர்கள் இப்படி உள்ளனர் என்று நீங்கள் நினைத்து பார்த்து உண்டா ? இவர்கள் இயலாமையை ஒரு கலையைபோல கற்றுக்கொண்டு விட்டனர்.

1965 ஆம் ஆண்டு Seligman என்ற உளவியல் ஆய்வாளர், நாய்களை கொண்டு ஆய்வு செய்து அதன் முலம் நமக்கு, இயலாமையை எப்படி கற்கின்றோம் என்று சுட்டிகாட்டினார். இந்த ஆய்வில் அவர், ஒரு நாயை கட்டிபோட்டு அதற்க்கு மணி சத்தத்துடன் சேர்த்து அபாயமில்லாத அளவு மின்னதிர்வுகளை கொடுத்தார் இவ்வாறாக ஒரு நாலைந்து முறை செய்த பிறகு அந்த நாயின் கட்டைஅவிழ்த்து விட்டு அதை எளிதில் தாண்ட குடிய ஒரு பெரிய பெட்டியில் வைத்தார், பிறகு மீண்டும் அந்த நாயிற்க்கு மணி சத்தத்துடன் சேர்த்து அபாயமில்லாத அளவு மின்னதிர்வுகளை கொடுத்தார். மணி சத்தம் கேட்டதும் நாய் குதித்து ஓடிவிடும் என்று எதிர்பார்த்தார் அனால் நாய் ஓடாமல் அந்த மின்னதிர்வுகளை ஏற்று அந்த பெட்டிக்குள் இருந்துவிட்டது. பிறகு கட்டிபோடமல் மற்றொரு நாயை எளிதில் தாண்ட குடிய ஒரு பெரிய பெட்டியில் வைத்தார், அதற்கும் மணி சத்தத்துடன் சேர்த்து அபாயமில்லாத அளவு மின்னதிர்வுகளை கொடுத்தார் அனால் இந்த நாயோ குதித்து ஓடிவிட்டது. ஏன் இந்த வேறுபாடு ? முதல் நாய் தன்னை கட்டிபோட்டதால் தான் மின்னதிர்வுகளில் இருந்து தப்பிக்க முடியவில்லை என்று பாராமல், எப்படியும் நம்மால் மின்னதிர்வுகளில் இருந்து தப்பிக்க முடியாது என்று கற்றுக்கொண்டுவிட்டது. ஆகையால்தான் கட்டை அவிழ்த்த போதும் அது ஓடாமல் அந்த மின்னதிர்வுகளை ஏற்று அந்த பெட்டிக்குள் இருந்துவிட்டது.

இதை போலதான் நாமும் சில சமயங்களில் , சில சூழ்நிலைகளில் , நம்மால் ஒரு சில காரியங்கள் முடியாமல் போய்விட்டால், நம் ஆழ் மனதில் இயலாமையை நாற்காலியை போட்டு அமர வைத்துவிடுகின்றோம். பிறகு, என்னால் எதுவும் முடியாது, நான் எதற்க்கும் தகுதியற்றவன், நான் திறமையற்றவன், என்று சதா சர்வ காலமும் புலம்பிகொண்டே இருக்க வேண்டியது. இந்நாளில் நம்மிடையே சில இலைஞர்கள் இநத இயலாமையால்பா திக்கப்பட்டு மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். இநத இயலாமை மிகவும் அபாயகரமானது. இது கரையானை போல ஒருவரின் திறமைகளை, தகுதிகளை, மகிழ்ச்சியை அரித்து விடும்.

நாம் இநத இயலாமை வலைக்குள் மாட்டிகொள்ளாமல் இருக்க செய்ய வேண்டியது மிக எளிமையான வழிமுறைகளே, அவை,

1. தீர ஆரயுதல் - ஒருவர்ருக்கு கணித பாடம் மிகவும் கடினமாக இருக்கிறது என்று வைத்துகொள்வோம் , அவர் உடனே எனக்கு கணிதம் பயில முடியாது, எனக்கும் கணிதத்துக்கும் மிக தொலைவு என்று சிந்திப்பதையும், பேசுவதையும் நிறுத்திவிட்டு, எந்த வகையான தவறுகள் செய்கின்றோம், ஏன் அவ்வாறு செய்கின்றோம் எப்படி திருத்திகொள்வது என்ற வழி முறைகளை தீர ஆராய வேண்டும்.

2. 'நான்' என்ற சொல்லை குறைத்து கொள்ளவேண்டும் ( 'ஐ' ட்ஞுண்ண்ச்ஞ்ஞுண்): நான் திறமையற்றவன், நான் முட்டாள், நான் தகுதியற்றவன் இவ்வாறன எண்ணங்களை சிறுது சிறிதாக குறைத்து அறவே அகற்றவேண்டும்.

3. அனைத்தும் நன்மைகே என்ற கொள்கை ( ணிணீtடிட்டிண்tடிஞி): வாழ்கையை எப்பொழுதும் பாசிடிவ் கண்ணோட்டத்துடன் பார்க்க கற்று கொள்ளவேண்டும். எது நடந்தாலும் அது நன்மைகே என்று கொள்ளல்வேண்டும்.

4. கடந்த காலத்தில் நடந்ததை கொண்டு நிழற்காலத்தை கணிப்பது மிகவும் தவறான ஒரு வழக்கம் , எனென்றால் கடந்த காலம் ஒரு அனுபவம், அந்த சூழ்நிலைக்கு நமக்கு கிடைத்த ஒரு அனுபவம் அதை கொண்டு நாம் நம் நிழற்காலத்தை கணிப்பது ஒரு அசட்டுதனமான செயல். நிழற்காலத்தின் சூழ்நிலை வேறு கடந்த காலத்தின் சூழ்நிலை வேறு.

5. 'முயற்சி செய் பலனை எதிர்பாராதே' இது மிகவும் முக்கியமானதொரு தாரக மந்திரம். நாம் ஒரு வேலையை செய்ய அதற்க்கு தேவையான முழு இடுபாடும், முழுமுயற்சியையும் செலுத்த வேண்டுமே ஒழிய அந்த வேலையால் பெற போகும் பலனை வைத்து நம் முயற்சியின் அளவை நிர்ணயிக்க கூடாது. பலன் வெற்றியோ தோல்வியோ முயற்சியை மட்டும் விட கூடாது. ஒரு முறையோ அல்லது இரண்டு முன்று முறையோ தோற்றுவிட்டால் உடனே எனக்கு திறமை இல்லை , என்னால் செய்ய முடியாது என்று முடிவுக்கு வரக்கூடாது. முயற்சி திருவினையாக்கும் என்பதை மனதில் இருத்தி இயலாமையை மனதிலிருந்து அகற்றுங்கள்.

ஒன்றை தெரியாது, முடியாது என்று சொல்லும் முன்பு இவைகளை மனதில் கொண்டு செயல்படுங்கள். வாழ்க்கையில் இயலாமையால் வரக்குடிய மன அழுத்தம், உளைச்சல்களை தவிர்த்து வெற்றியை மட்டும் இலக்காக கொண்டு மகிழ்ச்சியாக வாழ்தலே சிறப்பாகும்.

- Dr. Priyadarshini Srinivasan, Organisational Psychologist, Department of Psychology, Sunway University College


Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)