இலக்கு - மனோதத்துவம் சிறப்பு கட்டுரை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

இலக்கு - மனோதத்துவம் சிறப்பு கட்டுரை

நவம்பர் 24,2019  IST

Comments

ஒருவர் பயணம் செய்ய விரும்பினால் முதலில் அவர் என்ன செய்ய வேண்டும் ? தாம் செல்ல நினைக்கும் இடத்தை தீர்மானிக்க வேண்டும். பிறகு, பயணிக்கும் தேதி, நேரம், செலவு, பயண குறிப்பிடு, பயண வரைபடம், என்ன பலவற்றை நிர்ணையிக்கவேண்டும். அதேபோல், நாம் ஒவ்வொருவரும் வாழ்க்கை என்னும் கப்பலில் பயணித்து கொண்டுள்ளோம் , இந்த கப்பல்த சைமாறி செலாது இருக்கும் பொருட்டு கேப்டன் ஆனா நம்மக்கு ஒரு விடிவெள்ளி போல துணையாக இருப்பது நம்இலக்கு.

வாழ்க்கை என்னும் கடலில் நாம் முழ்காமல் தொலைந்து போகாமல் இருக்க, இலக்கு நமக்கு மிகவும் உறுதுணையாக அமைகிறது. இளமை பருவம் ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான கட்டமாகும். இந்த பருவத்தில் தான்ஒ ருவருடைய அதிக பட்ச உற்சாகம், அற்றல், தெளிவு, உடற்தெம்பு, ஆகியவை வெளிப்படுகின்றன அவை அத்யவசியமனதாக விளங்குகின்றது. ' பருவத்தே பயிர் செய்' இது சான்றோர் வாக்கு. ஆக இப்பருவத்தில் இலக்கு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். இலக்கு என்றால் என்ன ? இலக்கு என்பது எவ்வாறு இருக்க வேண்டும். எப்படி இலக்கை செயல் படுத்துவது என்று பார்போம். மய்லோடமாக பார்த்தல் எல்லோரும்இலக்குடன் செயல் படுவது போல்தான் தெரியும் ஆனால் சற்று சிந்தித்து பார்த்தோம் என்றால் அவை இலக்குகள்அல்ல வெறும் ஆசைகளே என்று புரியும். நன்றாக படிக்க ஆசை, புகழ்பெற வேண்டும் என்ற ஆசை, பணம் சேர்க்க ஆசை, தொழிலில் வெற்றி பெற ஆசை, இனிய இல்லறம் அமைய ஆசை, என்று பலபல ஆசைகள் ஆனால்இவைஎல்லாம் வெறும் ஆசைகளே ஆன்றி இலக்குகள் அல்ல. ஆனால் நம்மில் பலர் ஆசைகளே இலக்குகள் என்று தவறாக எண்ணிக்கொண்டுள்ளனர் . ஒரு இலக்கு என்பது எவ்வாறு இருக்க வேண்டும் எனில் SMART ஆக இருக்க வேண்டும். இந்த சொல் ஐந்து முக்கியமான குணங்களை கொண்டுள்ள சொல்லாக அமைத்துள்ளது . அவை,


S - SPECIFIC ( குறிப்பிட்ட)

M - MEASURABLE ( அளவுகோல்)

A - ACHIEVABLE (அடையகுடிய)

R - RESONABLE நேர்மையாக)

T - TIME BOUND ( நேரம்)

ஒரு ஆசை எவ்வாறு இலக்காக மாற்றுவது என்று பார்போம் . ஒருவர் நல்ல வேளையில் சேர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளார் என்றால் அவர் இலக்கு அந்த ஆசையை எவ்வாறு இலக்காக வடிவமைப்பது என்று பார்போம். முதல் கட்டமாக, அவர் எந்த வேலையில் சேர வேண்டும், எந்த நிறுவனத்தில் சேர வேண்டும் என்று மிகவும் தெளிவாக, எந்த ஐயப்பாடும் இன்றி குறிப்பிட்டு கொள்ளவேண்டும். பிறகு, அந்த வேலையில் சேர தேவையான பயிற்சிகளை தேர்தெடுத்து அவைகளை நம் அளவுகோல்களாக அமைதல் வேண்டும், அதற்கடுத்து, இந்த பயிற்சிகளில் தேர்வு பெற சிறு சிறு எளிதில் அடையக்கூடிய இலக்குகளை கொள்ளவேண்டும்.

இது மிகவும் முக்கியமான கட்டம் என்னென்றால், இந்த சிறு இலக்குகளை அடையும் போது நமக்கு மகிழ்ச்சியும் , தன்நம்பிக்கையும் உண்டாகும். அது நமக்கு இலக்கை அடையகுடிய புத்துணர்ச்சியை அளிக்கின்றது. நான்காவது கட்டமாக, நாம் இலக்கை அடைய வழிமுறைகளை தேர்தெடுக்க வேண்டும், அவை நேர்மையாக இருத்தல் வேண்டும். எனென்றால், நேர்மை அற்ற வழிமுறைகளை வெற்றி தருவதில்லை. உலக பணக்காரர் பட்டியலில் கள்ள பணம் வைத்திருப்பவர் பெயர் என்றுமே இடம்பெறாது. அதுபோல்தான் , எந்த இலக்கிலும் வெற்றி பெற நேர்மையான வழிமுறைகளை தேவை. இறுதியாக நாம் குறித்து கொள்ளவேண்டியது , நாம் இந்த இலக்கை அடையகுடிய நேரத்தை.

நேரம் மதிப்பில்லாத அறிய பொக்கிஷம், ஒரு இலக்கில் மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. நான்இந்த நிறுவனத்தில், இந்த வேலையில், இந்த தகுதிகளுடன், இந்த ஆண்டு, இந்த தேதியில்சேருவேன் என்று இலக்கு அமைத்தல் வேண்டும். ஒரு வேலையில் தனது 25ஆம் ஆண்டில் சேர் ஆசைப்பட்டு அதே வேலையில் தனது 40 ஆவது வயதில் சேர்ந்தால் அது வெற்றியும் அல்ல, முழு மகிச்சியும் பெற முடியாது. ஆகவே, எந்த நேரத்தில் இலக்கை அடைய வேண்டும் என்ற தெளிவு இருத்தல் ஒருவர்ருக்கு மிகவும் அவசியம் இலக்குகளில்நுட்பமான விஷயம் என்னவென்றால் சேரவேண்டும், கிடைக்கவேண்டும், வாழவேண்டும் என்று இருக்கக்குடாது, சேருவேன், கிடைக்கும், வாழ்வேன் என்று அமைத்தல் மிகவும் உசிதமாகும்.

இவ்வாறு நாம் இலக்குடன் செயல்பட்டால் ஒருபொழுதும் உற்சாகம் குன்றாமல் வாழ்க்கையில்எ ளிதாக வெற்றி அடைய முடியும். இது உளவியல் துறை வல்லுனர்களின் ஆராயிச்சிகளில்க ண்டுபிடிக்கப்பட்ட உண்மை. ஆதலால், வெறும் ஆசைகளை மட்டும் கொண்டு வாழ்ந்து விடாமல்அந்த ஆசைகளை நிறைவேற சரியான இலக்குகளுடன் செயல்ப்பட்டு வெற்றிபெற்று உங்கள்வாழ்கையை பயனுடையதாகவும், வளமுடையதகவும் ஆக்குங்கள்.

-Dr. Priyadarshini Srinivasan, Organisational Psychologist, Department of Psychology, Sunway University College. Malaysia

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)