நைஜீரியா முத்தமிழ் பண்பலை அஸோஸியேஷனின் இன்னிசை விருந்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியா முத்தமிழ் பண்பலை அஸோஸியேஷனின் இன்னிசை விருந்து

நவம்பர் 26,2019  IST

Comments

லேகோஸ், நைஜீரியா: முத்தமிழ் பண்பலை அஸோஸியேஷன், நைஜீரியா வழங்கிய "ரோஜாப்பூ ஆடி வந்தது" இன்னிசை விருந்து, லேகோஸ் தமிழ் சமூகத்தினரை செவிக்கும், மனதிற்கும் அலாதி திருப்தியை ஈட்டியது. இது ஒரு சிறு தன்னார்வல இசை குழுமம். இசையின் மீது அதிக நாட்டமுள்ள லேகோஸ் வாழ் தமிழர்கள் சிலர் ஒன்று கூடி 3.5 ஆண்டுகளுக்கு முன்னர் உருவாக்கிய ஒரு சிறிய அமைப்பு இன்று லேகோஸின் இந்திய வட்டாரத்தில் முதல் நேரலை இசை குழுவாக அங்கீகாரம் பெற்றுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது.

இம்முறை சென்னையிலிருந்து இசை வாத்திய கலைஞர்களான திரு ஆரோக்கியராஜ், திரு முரளி, திரு மதன், திரு அஷ்வின் அவர்கள் வந்து இசைக்கு உயிரூட்டி ரசிகர்கள்களை ஆரவாரப்படுத்தினார்கள். முத்தமிழ் பண்பலையின் தலைவர் திரு இன்பராஜ் அவர்கள் மற்றும் வந்திருந்த இசை கலைஞர்கள் அனைவரும் பல தமிழ் திரையுலக இசையமைப்பாளர்களுடன் பணிபுரிந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறப்பு விருந்தினராக வந்திருந்த திருமதி சித்ரா மோஹன்குமார் இரண்டு பாடல்கள் பாடியதும், திரு சங்கர் பிரபாகரன் அவர்களின் தொய்வில்லாத தமிழ் தொகுப்பும் நிகழ்ச்சியை இசை நதியில் நீந்தச்செய்தது. மேலும் இன்னிசை கச்சேரி நேரலையில் பாடல்களுக்கு ஏற்றார் போல் இம்முறை குழந்தைகள் நடனமும் இடம்பெற்றது நிகழ்ச்சியின் சிறப்பம்சமாக விளங்கியது.

இந்த ரோஜாப்பூ ஆடிவந்தது நிகழ்ச்சியின் இசைமாலையை உடன் வழங்கிய ஸ்பான்ஸர்களையம், வாட்ஸ்ஆப் குறும்படம் செய்து ஆதரவு தெரிவித்த பின்னனி பாடகி சின்னக்குயில் திருமதி கே.எஸ். சித்ரா அவர்களுக்கும், சூப்பர் சிங்கர் பிரபலங்களான பாடகர் ஷ்ரவன் மற்றும் பாடகர் ஶ்ரீநிவாஸ் அவர்களுக்கும் MகஅN சங்க தலைவர், நிர்வாகிகள், பொருளாளர், மற்றும் சங்க உறுப்பினர்கள் தங்கள் நன்றியை தெரிவித்துக்கொண்டுள்ளனர்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)