ரிச்மாண்ட் கோயிலில் சங்காபிஷேகம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ரிச்மாண்ட் கோயிலில் சங்காபிஷேகம்

நவம்பர் 27,2019  IST

Comments

ரிச்மாண்ட்: அமெரிக்கா, ரிச்மாண்ட் நகர கோயிலில், கார்த்திகை சோமவாரத்தை ஒட்டி, சிவபெருமானுக்கு சங்காபிஷேகம் நடைபெற்றது. இந்த கோயிலில் சங்காபிஷேகம் நடைபெறுவது இதுவே முதன்முறை என்பதால் பக்தர்கள் பெருமகிழ்ச்சி அடைந்தனர். இந்த சங்காபிஷேகத்திற்காக இந்த சங்குகளை ராமேஸ்வரத்திலிருந்து சில சிவ பக்தர்கள் அனுப்பி இருந்தனர். பண்டிதர் கண்ணன் மேற்பார்வையில், சங்குகள் தூய்மை செய்யபட்டு, சந்தனம், குங்குமம வைக்கப்பட்டு, சிவலிங்கம் வடிவில் வைக்கப்பட்டன. உமா மற்றும் மஹேஸ்வரருக்காக என இரண்டு கலசங்கள் அதன் நடுவே வைக்கபட்டன. கலசங்களிலும் சங்குகளிலும் நீர் நிரப்பப்பட்டு பூஜை செய்யப்பட்டது. வேத மந்திரம் மற்றும் ருத்ர ஜபத்தை அர்ச்சகர்களும் பக்தர்களும் முழங்க, சிவபெருமானுக்கு பால் மற்றும் கலசங்களிலும் சங்குகளிலும் இருந்த நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. நிறைவாக பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மீண்டும் டிசம்பர் 2 மற்றும் 9 தேதிகளிலும் சங்காபிஷேகம் நடைபெற உள்ளது.

- தினமலர் வாசகர் நடராஜ மூர்த்தி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)