கோலாலம்பூரில் கவிஞர் சினேகன் கலந்துகொண்ட பாடலாசிரியர் பயிலரங்கம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கோலாலம்பூரில் கவிஞர் சினேகன் கலந்துகொண்ட பாடலாசிரியர் பயிலரங்கம்

நவம்பர் 28,2019  IST

Comments

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஏற்பாட்டில், AT Movies ஆதரவில் நவம்பர் 23 மற்றும் 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் பாடலாசிரியர் பயிலரங்கம் நடைபெற்றது. காலத்தை வென்ற மிகசிறந்த படலாசிரியர்களை உருவாக்கும் நோக்கில் பயிலரங்கம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகவும் பயிற்றுனராகவும் பாடலாசிரியர் கவிஞர் சினேகன் கலந்துகொண்டார். நிகழ்ச்சி ஏற்பட்டிற்கென மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் சிறப்பு குழு அமைத்திருந்தது. மலேசியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து பயிலரங்க பங்கேற்பாளர்களாக கல்லூரி மாணவ மாணவிகள், பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்கள், பாடலாசிரியர்கள், நடிகர்கள், மருந்தியல் துறை சார்ந்தவர்கள், மீடியா துறை சார்ந்தவர்கள், எழுத்தாளர்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர்கள், திரைப்பட இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள், பாடலாசிரியர்கள் என திரைப்பட பாடல்கள்மீது ஆர்வம்கொண்ட 13 குழுக்களாக மொத்தம் 150 பேர் கலந்து கொண்டனர்.நவம்பர் 23-ம் தேதிமுதல்நாள்நிழச்சியில் மாலை 2 மணி அளவில் பங்கேற்பாளர்கள் குழு தலைவர்களுடன் குழுவாரியாக பதிவு மற்றும் அறிமுகம் கோலாலும்பூர் Signature ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது, பாடலாசிரியர் கவிஞர் சினேகன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். தனது வாழ்வில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தியது என அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். எனக்கு கிடைக்காதது இந்த தலைமுரைக்கு கிடைக்கவேண்டும் என்ற ஒற்றை சிந்தனையில் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கம் ஒற்றை சிந்தனையில் பயிற்சியை ஏற்பாடு செய்துள்ளது எனவும், படைப்பதனால் நான் இறைவன், என கண்ணதாசன் ஒரு வரி சொன்னது போல, திமிர் வரவேண்டும் என்றால், பாடல்களின் அடி நாதம் என்ன, எங்கிருந்து தொடங்கியது, நான் யார், இந்த சமூகத்தை, அவலத்தை, இயற்கையை, காதலை, காமத்தை, வாழ்வியலை பாடவந்தவன், இசையை உள்ளடக்கி வார்த்தைகளை தயாரிக்க வந்தவன் என்ற திமிருடன் நாளை வாருங்க எனவும், ஒவ்வொருவரும் அவரவர் வாழ்வை ரசியுங்கள், வார்த்தைகள் தானாக வரும் என தன் முன்வுரையை வழங்கினார். பங்கேற்பாளர்களுக்கு கோலாலம்பூர் maraz.tv பாடல் ஒளிப்பதிவு கூடம் பார்வையிடல் ஏற்பாடு செய்யப்பட்டது. இரவு 7 மணி அளவில் தொடக்க விழா கோலாலம்பூர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கலை கலாச்சார மையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் பாடலாசிரியர் பயிலரங்கிக்கு ஆதரவு வழங்கிய திரைப்பட தயாரிப்பாளர் AT Movies இயக்குனர் டத்தோ ஆதி, இந்திய கலை கலாச்சார மையத்தின் இயக்குனர் அய்யனார் மற்றும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். மலேசியா பாடலாசிரியர்கள் ஃபினிக்தாசன், அருள் செல்வன், மணி வில்லன்ஸ்,யுவாஜி நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டனர். நவம்பர் 24-ம் தேதி இரண்டாம் நாள் நிழச்சியில் காலை 7 மணிக்கு பயிலரங்கம் கோலாலும்பூர் விவேகானந்தா பள்ளியில் துவங்கியது. நிகழ்ச்சிகளின் இடையிடையே பங்கேற்பாளர்களிடையே புத்தக பரிசு பரிமாற்றம் ஏற்பாடுசெய்யப்பட்டது.காலை 8.30 மணி முதல் மாலை 5 மணிவரை பாடலாசிரியர் சினேகன் பங்கேற்பாளர்களுக்கு சினிமா பாடல்களின் தோற்றம், தமிழ் திரையுலகில் சிறந்து விளங்கிய பாடலாசிரியர்கள் பட்டுக்கோட்டைக் கல்யாணசுந்தரம், கவிஞர் கண்ணதாசன், கவிஞர் வாலி, கவிப்பேரரசு வைரமுத்து மற்றும் பல்வேறு கவிஞர்களின் சிறப்பு குறித்து எடுத்துரைத்தார். தமிழ் திரையுலகில் பல்வேறு சிறந்த கலைனர்களிடம் தான் கண்ட வியந்த சிறந்த பண்புகள், தமிழ் திறமைகளை வளர்த்துக்கொண்ட மற்றும் பணியாற்றியபோது கிடைத்த அனுபவங்கள், பாடல்கள் வரிகளை படைக்கும் நுணுக்கங்களை கற்றுக்கொடுத்தார்.நிறைவுவிழாவில் Signature ஹோட்டல் தலைவர் சிலாங்கூர் மாநில இந்திய வர்த்தக சங்க தலைவர் தொழில் முனைவர் டத்தோ ஷண்முகநாதன், தொழில் முனைவர் ரகுநாதன் பெருமாள், இந்திய கலை கலாச்சார மையத்தின் இயக்குனர் அய்யனார், மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க தலைவர் இராஜேந்திரன் ஆகியோர் உரையாற்றினர். பங்கேற்பாளர்கள் அனைவர்க்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க துணை தலைவர் பொன் கோகிலம் தலைமையில் இயங்கிய ஏற்பாட்டுக்குழுவில் கவிஞர் தமிழ்செல்வம், சங்க துணைச்செயலாளர் இராசி தமிழரசி, செயலவை உறுப்பினர் முல்லைச்செல்வன், கடாரச்சோழன் ஆகியோரும். துணை குழு உறுப்பினர்கள் துர்காஷினி, கவினா ஸ்ரீ, அனுஷா, ஹேமலா, பொன் கோமளம், பிரமிளா மற்றும் குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.நிகழ்ச்சியின் இறுதியாக ஏற்பட்டு குழு தலைவர் மற்றும் மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்க துணை தலைவர் பொன் கோகிலம் நன்றியுரை வழங்கினார். ஏற்பட்டு குழு உறுப்பினர்களுக்கு நினைவு பரிசுகளுடன் கௌரவிக்கப்பட்டனர்.

- நமது செய்தியாளர் வெங்கடேசன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)