மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாழையிலை விருந்து | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் வாழையிலை விருந்து

நவம்பர் 30,2019  IST

Comments

 வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநிலத்தில் தமிழ் மொழி சார்ந்தும், தமிழர் கலைகள் சார்ந்தும் பல நிகழ்வுகள் ஆண்டு முழுவதும் மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தால் நடத்தப் படும். அந்த வரிசையில் தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பினைக் கொண்டாடும் விதமாக வாழையிலை விருந்து நடைபெற்றது. 2015 ஆம் வருடம் மினசோட்டாவில் முதல் முறையாக அறிமுகப் படுத்தப்படட இந்த வாழையிலை விருந்தில், சுமார் 400க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். நமது தமிழ் மரபு சார்ந்த உணவு வகைகளை தொடர்ந்து படைத்து வருகிறது.

மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் இந்த தொடர் முயற்சியைப் தமிழ் நாடு பத்தாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாழையிலை விருந்து மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் செய்தியாக இருந்தது. இந்த வருட வாழையிலை விருந்தில் முதல் முறையாக நெகிழிகளை பயன்படுத்தாமல், பாக்கு மட்டையில் செய்யப்பட்ட தட்டு, கரும்புச்சக்கையில் செய்யப்பட்ட தண்ணீர் குடிக்க குடுவை, பாயாசம் குடிக்க கிண்ணம், மரத்தில் செய்யப்பட்ட சிறிய மரக்கரண்டி போன்றவற்றை பயன்படுத்தி சுற்றுப்புறச் சுழலுக்கு உகந்ததாகவும், தண்ணீர் வீணாக்குவதை தவிர்ப்பதற்காகவும், தமிழ்ச் சங்கமாக நடைமுறைப்படுத்தி முன்மாதிரியாக இருந்தது.

அருமையான தலைவாழையிலையில் சுவையான உணவுகளும், விருந்துண்ண வந்திருந்தவர்களை முகமலர்ச்சியுடன் உணவு பரிமாறி, நமது தமிழர்களின் விருந்தோம்பல் சிறப்பை முன்னிறுத்தி உணவுகள் பரிமாறப்பட்டது. தலைவாழை இலையில் பரிமாறப்பட்ட சுவையான உணவு வகைகள் - சமைத்தவர்கள் உதவியவர்கள் பெயருடன் துறையூர் இனிப்பு வில்லை - திருமதி.ராகினி, திரு.இளங்கோ மதுரை காய்கறி பிரியாணி - திருமதி.ராணி விருதுநகர் வெள்ளை சோறு - ஆறுமுகம், திரு.சிவா, திருமதி.ராணி, திருமதி.பிரியா உடன்குடி முருங்கை மாங்காய் சாம்பார் - திருமதி.கீதா காஞ்சிபுரம் வெண்டை காரக்குழம்பு - திருமதி.பிரியா ராசிபுரம் சுரைக்காய் கூட்டு - திருமதி.சுதா, திரு.ராஜன் - நண்பர்கள் மன்னார்குடி உருளை வறுவல் - திருமதி.அனிதா, திருமதி.ரோஸி மற்றும் திருமதி.பிரசன்னா! உசிலம்பட்டி பருப்பு வடை - திரு.சுந்தர், திருமதி.ராஜி அப்பளம் - திரு.நவாஸ் நாகர்கோவில் கொண்டக்கடலை சுண்டல் - திருமதி.ஆனந்தி. திருச்சி தக்காளி மிளகு ரசம் - திருமதி.சரண்யா, திருமதி.சங்கீதா உடன்குடி பருப்பு தேங்காய் கருப்பட்டி பாயசம் - திருமதி.விஜயா,குமார்! தாளித்த மோர் - திரு.விஜய் திருமதி.அணுவிஜய் பாளையங்கோட்டை வெங்காய பச்சடி - திரு.பாலா! மோர் மிளகாய் மற்றும் தண்ணீர் - திருமதி.இலட்சுமி, திரு.சுப்பு அவித்த முட்டை - திருமதி.அபி , திரு.நாகப்பன் ஊறுகாய் - திரு.முரு ஆம்பூர் ஆட்டுக்கறி பிரியாணி - செட்டிநாட்டு கோழிக்கறி - திரு.ராஜிவ், திருமதி.சங்கீதா, திருமதி.கிருத்திகா, திருமதி.சுபா, திருமதி.சங்கீதா திரு.சரவணன், திருமதி.தர்ஷனா, திருமதி.யாமினி, திரு.கோபி, திரு.செந்தில், திரு.ராம், திரு.பாலா

அனைவருக்கும் தமிழர்களின் உணவுச் சுவையையும், விருந்தோம்பல் சிறப்பையும் எடுத்துச் சொல்லும் மன நிறைவு அடையச்செய்த விழாவாக நடைபெற்றது. இவ்விருந்தில் சுமார் 350 அதிகமான மக்களுக்கு கறி மற்றும் சைவ உணவுகள் பரிமாறப்பட்டது. உணவு சமைத்த, சமைக்க உதவிய, உணவு பரிமாறிய, சுத்தம் செய்த அனைவருக்கும், சிறந்த முறையில் திட்டமிட்டு செயல் படுத்திய மினசோட்டாத் தமிழ்ச் சங்க குழுவினர்களுக்கு, விருந்தில் கலந்து கொண்ட அனைவரும் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர். 

- தினமலர் வாசகர் சுந்தரமூர்த்தி


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us