தமிழ்நாடு அறக்கட்டளை- ஹூஸ்டன் கிளை குழந்தைகள் தினவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ்நாடு அறக்கட்டளை- ஹூஸ்டன் கிளை குழந்தைகள் தினவிழா

டிசம்பர் 01,2019  IST

Comments

குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர். இந்த குறளின் பொருள் அனுப்பிவைத்தோரே அறிவர். தமிழ்நாடு அறக்கட்டளை, ஹூஸ்டன் கிளை, நேற்று மாலை குழந்தைகள் தினத்தை செவ்வனே கொண்டாடினர். நிகழ்ச்சியின் தொடக்கமாக திரு. பால் கார்ப்பெண்ட்டரின் மாயாஜாலம் அனைவரையும் குதூகுலத்தில் ஆழ்த்தியது. ஒவ்வொரு ஆண்டும் பெற்றோர்கள் ஆவலாக இந்த தினத்தை எதிர்நோக்கி தங்கள் பிள்ளைகளை தயார் செய்வது வழக்கம்.

இம்முறை வயதிற்க்கேற்ப நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஹூஸ்டன் பிள்ளைகள் தங்கள் திறமையை வெளிப்படுத்தினர். சிறார்களின் 'ஆடலும் பாடலும்' நிகழ்ச்சியில் விவசாயத்தை மைய்யக்கருத்தாகக்கொண்டு பிள்ளைகள் நடனமாட, அவையே ஆரவாரத்தில் மூழ்கியது. 'செல்ஃபீ வித் ஸ்டார்ஸ்' என்ற தலைப்பில் வித்தியாசமான முறையில் மாறுவேட போட்டியில் சிறுவர்கள் தங்களுக்கு விருப்பமான பிரபலங்களை அற்புதமாக நடித்துக்காட்டினார். இயற்க்கை விவசாயம் பற்றியும் விவசாயம் என்பது சேவை என்றும் அவர்கள் எடுத்துக்கூறிய கருத்து அனைவரையும் வெகுவாக கவர்ந்தது.

சூப்பர் சிங்கர் போட்டியைப்போல் தமிழ்நாடு அறக்கட்டளை செம சிங்கர் என்ற பாட்டுப்போட்டியில் பல பிள்ளைகள் தங்கள் குரல் வலிமையை காட்டினார். இவர்களில் சிறந்த பாடகர்களை 'சூப்பர் சிங்காரி புகழ் பாடகர் சாய்சரண் அவர்கள் தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது. சிறுவன் அபினவ் வெங்கட்ராமன் பாடிய 'ராசாத்தி உன்ன' பாடல் பார்வையாளர்களின் மனதை பிழியும் வண்ணமாக அமைய, அரங்கமே கரவொலியில் விண்ணை பிளந்தது. இவரை பற்றி இணையம் வழியாக பாடகர் சாய்சரண் அவர்கள் 'இவர் மாற்றுத்திறனாளி அல்ல, தேர்ந்த திறனாளி ' என்று கூறியது அனைவரையும் நெகுழச்செய்தது. இதனை தொடர்ந்து ஹூஸ்டனில் ஆடிப்பாடி கலக்கிய முன்னாள் பள்ளி இந்நாள் கல்லூரி மாணவர்கள் ஆதி கோபால் மற்றும் ஸ்ரீ சன்விதா ஆகிய இருவரும் திரையிசை பாடல்களை பாடி மகிழ்வித்தனர்.

நிகழ்சசியின் போது தமிழ்நாடு அறக்கட்டளை ஹூஸ்டன் கிளையின் தலைவி திருமதி மாலை கோபால் அலுவலக உறுப்பினர்களை அறிமுகப்படுத்தி, இந்த நிறுவனத்தின் மூலம் தமிழகத்தில் பயனடையும் பள்ளிகளை பற்றியும் அங்கு சிறப்பு பயிற்சி கொள்ளும் பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் பற்றியும் எடுத்துக்கூறியது அனைவரையும் சிந்திக்க வைத்தது. இப்படிப்பட்ட தொண்டு நிறுவனத்திற்கு மக்கள் அளிக்கும் ஆதரவிற்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொண்டார். இறுதியில் பல்சுவை விருந்தினை ஹூஸ்டனின் பாவர்ச்சி உணவகம் படைக்க அனைவரும் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியுடன் உணவருந்தினர்.

- தினமலர் வாசகர் தங்கராஜ் பச்சையப்பன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us