நவ பாரதம் பஹ்ரைன் சார்பாக தொழிலாளர்களுக்கு நல திட்ட பணிகள் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நவ பாரதம் பஹ்ரைன் சார்பாக தொழிலாளர்களுக்கு நல திட்ட பணிகள்

டிசம்பர் 01,2019  IST

Comments

பஹ்ரைன் மணாமா: இந்திய கலாச்சார அமைப்பான நவ பாரதம் சார்பாக கடந்த வெள்ளிக்கிழமை நவம்பர் 29, 2019 அன்று தொழிலாளர்களுக்கு பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கும் விழா ஹபீரா தொழிலாளர் விடுதியில் சிறப்பாக நடைபெற்றது. காலை நடைபெற்ற இலவச முகாமில் சுமார் 300 தொழிலாளர்கள் கலந்துகொண்டு மருத்துவ உதவி பெற்றனர். பின்பு மூத்த உறுப்பினர் ஆஷா பிரதீப் அவர்கள் தலைமையில் தொழிலாளர்களுக்கு யோகா பயிற்சி வழங்கப்பட்டது. அப்போது அவர் பேசும்போது 'யோகா இந்தியாவின் பொக்கிஷம், மனதையும் உடலையும் பேணிக்காக்க யோகா பயிற்சியை தொடர்ந்து செய்ய வேண்டும்' என்று கூறினார். பல்வேறு இந்திய கலாச்சார நடனங்களை சங்கீதா சாஜு மற்றும் ஷ்ரவன் குழுவினர் நடத்திக்காட்டினார்.

சுமார் 500 நலிந்த தொழிலாளர்களுக்கு அரிசி, பருப்பு, கோதுமை மாவு, எண்ணெய் உள்ளிட்ட சமையல் பொருள்கள் வழங்கப்பட்டது. காலை மதிய உணவுகள் மற்றும் மாலை சிற்றுண்டி ஆகியவை பரிமாறப்பட்டன. நல திட்ட பணிகளுக்கு உதவிய கத்தார் இன்ஜினியரிங் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பாபுராஜ் மற்றும் டெல்டா எலக்ட்ரிகல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரதீப் குமார் ஆகியோருக்கு விழா குழுவினர் நன்றி தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பேசிய நவ பாரதம் அமைப்பின் தலைவர் ஜெயக்குமார் 'இன்று நடைபெற்ற நல திட்ட உதவிகள் மூலம் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளோம், இதேபோல் தொடர்ந்து பல சேவைகளை செயல்படுத்தப்படும்' என்று கூறினார்.

உதவிகளை பெற்ற தொழிலாளர்கள் நவ பாரதம் அமைப்பினருக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

- நமது செய்தியாளர் பெ. கார்த்திகேயன்

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)