சிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்ப பூஜை | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஸ்ரீ ஐயப்ப பூஜை

டிசம்பர் 02,2019  IST

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ ஐயப்ப பூஜை வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில் ஸ்ரீ ஐயப்ப சங்கல்பத்துடன் தொடங்கிய பூஜை விக்னேஸ்வர பூஜை, விசேஷ நெய் அபிஷேகத்துடன் கோலாகலமாக நடைபெற்றது. பக்தப் பெருமக்கள் செலுத்திய குடம் குடமான பாலாபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. நன்கு அலங்கரிக்கப்பட்டிருந்த பதினெட்டாம் படி பூஜை தொடர்ந்தது. விசேஷ திரவியாபிஷேகத்தால் ஸ்ரீ ஐயப்பன் குளிர்ந்தார். பக்தர்கள் சேர்ந்திசைத்த ஹரிவராசன தரிசனப் பாடலும் ஸ்ரீ ஐயப்ப சகஸ்ரநாம அர்ச்சனையும் மெய் சிலிர்க்க வைத்தன.

சீருடை அணிந்த ஐயப்ப பக்தர்களின் பஜனையும் சரண கோஷமும் திரு விளக்குப் பூஜையும் இவ்வட்டாரத்தையே தெய்விக மணம் கமழச் செய்தன. பேட்டைத் துள்ளல் காட்சி அருமை. சர்வ அலங்கார நாயகராக ஸ்ரீ ஐயப்பனுக்கு ஷோடக உபசார மகா தீபாராதனை நடைபெற்ற போது பக்தர்கள் மனமுருகி சரண கோஷம் முழங்கினர். ஆலய நிர்வாகம் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)

வாசிங்டன் தமிழ்ச்சங்கம்- நிர்வாகிகள் (2019- 2020)...

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)

நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம் ( 2019- 2020)...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம்- நிர்வாகிகள் ( 2019- 2021)...

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்

டாப் இன் டவுன் இந்தியன், ( சைவ உணவகம்) பிரிஸ்பேன்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2019 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us