சிங்கப்பூரில் கதைக்களம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கதைக்களம்

டிசம்பர் 04,2019  IST

Comments

சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர் கழகம் மாதந்தோறும் பெக் கியோ சமூக மன்ற இந்தியர் நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து நடத்தும் கதைக்களம் டிசம்பர் முதல் தேதி மன்ற அரங்கில் கழகத் தலைவர் சுப.அருணாசலம் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. சிங்கப்பூரின் பிரபல பட்டி மன்றப் பேச்சாளரும் இருமொழிப் பெயர்ப்பாளருமான பேராசிரியர் முனைவர் ராஜி ஸ்ரீநிவாசன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார். முதல் அங்கமாக செல்வி பிரீத்தி ராஜா நீதிக் கதை ஒன்றைச் சுவைபட எடுத்துரைத்தார்.

பொதுப் பிரிவுப் போட்டிக்கு வந்த கதையை பிரபாவதி வாசித்தார். கதை விமர்சனத்தை சியாம் குமார் வாசித்தார். மாணவர் பிரிவுக்கு வந்த கதைகளில் ஒன்றை மாணவர் சரவணன் படித்தார். சிங்கை உள்ளூர் எழுத்தாளர் அங்கத்தில் வெண்பாச் சிற்பி அமரர் வி.இக்குவனம் படைப்புக்கள், சாதனைகள், அவர் பெற்ற விருதுகள் பற்றி சங்கமித்ரா உமாசங்கர் விளக்கப் படங்களுடன் விரிவாக எடுத்துரைத்தார். இந்த அங்கத்தை மணிமாலா வழிநடத்தினார். சிறப்பு விருந்தினர் ராஜி ஸ்ரீநிவாசன் தமதுரையில் ஆங்கில, தமிழ்ச் சிறுகதைகளை ஒப்பாய்வு செய்து சிறுகதை இலக்கணம், எழுதும் முறைகள், காட்சிப்படுத்துதல் பற்றி விளக்கினார். கழகத் தலைவர் நடப்பாண்டில் கழகம் ஆற்றிய பணிகள் பற்றி எடுத்துரைத்தார்.

இம்மாத மாணவர் சிறுகதைப் போட்டியில் மாணவர்கள் ராமன் சரவணனும் விஜேத்தாவும் பரிசு பெற்றனர். பொதுப் பிரிவுப் போட்டியில் சியாம் குமார் முதல் பரிசும் உமா சங்கர் நாராயணன் இரண்டாவது பரிசும் தேன்மொழி மூன்றாவது பரிசும் பெற்றனர். சிறந்த விமர்சனத்திற்கான முதற்பரிசு கீழை அ.கதிர்வேலுவுக்கு வழங்கப்பட்டது. இரண்டாவது பரிசினை சித்ரா தணிகைவேல் பெற்றார். முகநூல் கருத்துக்களைப் பதிவு செய்த சித்ரா தணிகை வேலுவுக்கு கீழை அ.கதிர்வேலு புத்தகப் பரிசளித்துச் சிறப்பித்தார். கழகச் செயலவை உறுப்பினரும் கதைக்களப் பொறுப்பாளருமான பிரேமா மகாலிங்கம் நிகழ்வினைச் செவ்வனே நெறிப்படுத்தினார். சிறு கதை ஆர்வலர் பலர் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)