அபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அபுதாபியில் அய்மான் சங்கத்தின் முப்பெரும் விழா

டிசம்பர் 04,2019  IST

Comments

அபுதாபி : அபுதாபி இந்தியன் இஸ்லாமிய அரங்கில் உத்தம நபி(ஸல்) உதய தின விழா, அய்மான் சங்கத்தின் 40 ம் ஆண்டு துவக்கவிழா, நாடாளுமன்ற உறுப்பினருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நவம்பர் 28-ம் தேதி வியாழக் கிழமை மாலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் துனைத்தலைவர் ஜனாப் *முஹம்மது ஜமாலுதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. அய்மான் பைத்துல்மால் தலைவர் ஜனாப் ஷாகுல் ஹமீது அவர்கள் முன்னிலை வகித்தார்.

அய்மான் சங்கத்தின் பொருளாளர் மெளலவி முஹம்மது அப்பாஸ் மிஸ்பாஹி அவர்கள் கிராஅத் ஒதி துவங்கி வைத்தார். அய்மான் சங்கத்தின் பொதுச்செயலாளர் மெளலவி அப்துல் ரஹ்மான் ரப்பானி வரவற்புறை நிகழ்த்தினார். அய்மான் சங்கத்தின் மார்கத்துறை செயலாளர் மெளலவி ஹுசைன் மக்கி மஹ்லரி அவர்கள் துவக்கவுரை நிகழ்த்தினார். சாதனைத் தமிழர், நோபில் மரைன் குழுமத்தின் தலைவர்,சமுதா புரவலர் அல்ஹாஜ் ஜனாப் ஷாகுல் ஹமீது ஸாஹிப் அபுதாபி பனியாஸ் மெட்டீரியல் நிறுவனர், சமுதாய புரவலர் அல்ஹாஜ் ஜனாப் ஹமீது மரைக்காயர் அமீரக காயிதே மில்லத் பேரவையின் தலைவர் ஜனாப் குத்தாலம் லியாகத் அலி ஸாஹிப் ,முஹிப்புல் உலமா மஃரூப் காக்கா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

சென்னைப் பல்கலைக் கழகத்தின் இஸ்லாமிய துறையின் முன்னாள் தலைவர், பன்னூல் ஆசிரியர்,அரபித்துறை வித்தகர் மெளலானா டாக்டர். சைய்யத் கராமத்துல்லாஹ் பஹ்மனி ஸாஹிப், அவர்கள் சிறப்புறையாற்றினார். இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கெளரவ ஆலோசகர் - மக்களவை கொறடா ஜனாப் ஓ. நவாஸ் கனி ஸாஹிப் Mக அவர்கள் ஏற்புறை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் துபை ஈமான் அமைப்பின் பொதுச்செயலாளர் ஜனாப் ஹமீது யாசின் மற்றும் நிர்வாகிகள், அமீரக காயிதே மில்லத் பேரவையின் பொதுச்செயலாளர் ஜனாப் ஹமீது ரஹ்மான் மற்றும் நிர்வாகிகள், தொழிலதிபர் சமுதாய புரவலர் கல்லிடைக்குறிச்சி ஏ. முஹம்மது முஹைத்தீன் அவர்கள், அமீரக மதிமுக தலைவர் பாலமுருகன், அய்மான் சங்கத்தின் முன்னோடித் தலைவர்கள், உலமாக்கள், சமுதாயப் புரவலர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், சமுதாயப் பிரமுகர்கள், சகோதர சமுதாய சொந்தங்கள் என பல தரப்பினரும் சங்கமித்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்ச்சியில் அய்மான் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் அவர்கள் எழுதிய விடியலைத் தேடி என்ற நூலை இராமநாதபுரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில கெளரவ ஆலோசகர் - மக்களவை கொறடா ஜனாப் ஓ. நவாஸ் கனி ஸாஹிப் Mக வெளியிட்டார். மஷ்னவீ ஷரீஃப் 5-ம் பாகத்தை முஹிப்புல் உலமா முஹம்மது மஃரூப் வெளியிட சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். அய்மான் சங்கத்தின் துணைப் பொதுச்செயலாளர் பூந்தை ஹாஜா மைதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்தினார்.

நிகழ்ச்சியின் இறுதியாக மெளலவி ஷர்புத்தீன் மன்பஈ துஆ ஓதினார்ர். இந்நிகழ்ச்சியினை அய்மான் சங்கத்தின் நிர்வாகிகள் பிர்தோஸ் பாஷா,நிஜாம் மைதீன், சாதிக் பாட்சா, லெப்பை தம்பி, அப்துல் காதர் ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)