ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் மார்க்கெட்

டிசம்பர் 06,2019  IST

Comments

 கார்த்திகை மாத மழையில் முளைக்கும் காளானுக்கு சுவை அதிகம். அது மாதிரி ஜெர்மனியில் இந்த சீசனில் பல இடங்களில் காணப்படும் கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு மவுசு அதிகம். இன்று உலகின் பல நாடுகளில் இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட் காணப்பட்டாலும் இதற்கு முன்னோடி என்னவோ ஜெர்மனி தான். 14ம் நூறாண்டில் கிறிஸ்துமஸ் சமயத்தில் நகரின் பல முக்கிய இடங்களில் ஆரம்பிக்கப்பட்ட தற்காலிக 'டென்ட்' கடைகள் தான் இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட். 12ம் நூற்றாண்டின் இறுதியில் டிசம்பர் மார்க்கெட் என்று ஆரம்பிக்கப்பட்ட இந்த கடைகள், அதன்பின் கிறிஸ்துமஸ் மார்க்கெட் ஆனது.

நவம்பர் இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்பட்டு கிறிஸ்துமஸ் வரையிலும் நீடிக்கும் இந்த கடைகளில் பெரும்பாலும் கிறிஸ்துமஸ் அலங்காரப் பொருட்கள்,கைவினைப் பொருட்கள், இந்த சீஸனின் பிரத்தியேக பிஸ்கட்கள், ஒயின் மற்றும் ஹாட் டாக் போன்ற இதர உணவுகள், அவ்வளவுதான்.ஆனால் வருமானமோ மிக அதிகம். ஜெர்மனியில் டோர்ட்முண்ட், கொலோன், டிரெஸ்டன், பெர்லின், மூன்சென், ஸ்ட்டுட்கார்டு, பிராங்பேர்ட், லைப்சிக் போன்ற நகரங்களின் கிறிஸ்துமஸ் மார்க்கெட் மிகவும் பிரபலம். 2017ம் ஆண்டு, டோர்ட்முண்ட் நகரில் அமைக்கப்பட்டிருந்த 45 மீட்டர் (147 அடி) உயரமுடைய கிறிஸ்துமஸ் மரம் தான் உலகிலேயே மிகப்பெரியது. 40 டன் எடைகொண்ட இந்த 'கிறிஸ்துமஸ் ட்ரீ' செய்ய 1,700 பர் (Fir) மரங்கள் பயன்படுத்தப்பட்டன. அந்த வருடத்தில் மட்டும் அமைந்த 300 கடைகளை ஏறத்தாழ மூன்றரை மில்லியன் மக்கள் பார்வையிட்டுள்ளனர்.

பிராங்பேர்ட் நகரைப் பொறுத்தவரையில் சராசரியாக 3 மில்லியன் மக்கள் வருடந்தோறும் இந்த கிறிஸ்துமஸ் மார்க்கெட் கடைகளுக்கு விஜயம் செய்கின்றனர்.Zeil ல் ஆரம்பித்து ரோமர் பிளாட்ஸ் வரையிலும் நீண்டிருக்கும் கிறிஸ்துமஸ் மார்க்கெட்டிற்கு மாலையில் சென்றால் எங்கும் பகல் போல வண்ண விளக்குகளுடன் கண்களுக்கு மட்டுமல்ல நாவிற்கு விருந்து கிடைக்கும்.மாலை நாலரை மணிக்கெல்லாம் இருட்டி விடுவதால் கடை முழுவதும் வண்ண LED விளக்குகள் ஒளிர்ந்து நம்மை பரவசப்படுத்துகிறது. என்ன, ஜெர்மனிக்கு கிளம்பிவிட்டீர்களா!


- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)