சிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் தங்க முனை பேனா விருது

டிசம்பர் 09,2019  IST

Comments

சிங்கப்பூர் தேசிய கலை மன்றம் ( அரசு சார்பு ) புதிய எழுத்தாளர்களை அடையாளம் காணவும்- வளரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்கவும் – இலக்கியப் படைப்புக்களை உருவாக்க உற்சாகப்படுத்தவும் தங்க முனை விருதுகளை அளித்து வருகிறது. விருதுக்குப் படைக்கப்படும் படைப்புக்கள் அவரவரின் சொந்தப் படைப்பாகவும், வேறு எந்த இணைய, அச்சுப் பகுதிகளில் வெளி வராதவைகளாகவும் இருத்தல் வேண்டும். சிங்கப்பூரின் அதிகாரத்துவ மொழிகளான மலாய், சீனம், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிப் படைப்புகளுக்கு இப்போட்டி நடைபெறுகிறது. சிறுகதை மற்றும் கவிதை எழுதுவதில் ஆர்வமுள்ளவர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

இப்போட்டியில் முதல் பரிசு பெறுவோருக்கு 4000 சிங்கப்பூர் வெள்ளி ரொக்கம் – சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படுகிறது. இரண்டாவது பரிசுக்குரியோர் 3000 வெள்ளி ரொக்கப் பரிசும் சான்றிதழ் மற்றும் பதக்கம் பெறுவர். மூன்றாவது பரிசுக்குரியோர் 2000 வெள்ளி ரொக்கப் பரிசும் சான்றிதழும் பதக்கமும் பெறுவர். சிறப்புப் பரிசுகளாக அடுத்து வரும் மூன்று இடங்களைப் பிடிப்பவர்கட்கு தலா 500 வெள்ளி பரிசளிக்கப்படும்.

இவ்வாண்டு நடைபெற்ற போட்டியில் தமிழ் மொழி சிறு கதைக்கான முதல் பரிசினை செந்தில்குமார் நடராஜன் பெற்றார். இரண்டாவது பரிசு வ.ஹேமலதாவுக்குக் கிடைத்தது. மூன்றாவது பரிசு ஹரிஹரன் சுப்பிரமணியனுக்கு வழங்கப்பட்டது.

கவிதைப் போட்டியில் சுபா– செந்தில்குமார் தம்பதியர் முதற்பரிசும் செல்வி சம்கி ( ஆயிலிஷா மந்திரா ) இரண்டாவது பரிசும் ராதா கிருஷ்ணன் பாலாஜி மூன்றாம் பரிசும் பெற்றனர். போட்டியில் வென்றவர்களுக்குப் பலத்த கரவொலிக்கிடையே பதக்கம், ரொக்கப் பரிசு சான்றிதழ்களை மன்றத் தலைவர் வழங்கி கவுரவித்தார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)