சிங்கப்பூரில் கார்த்திகை தீப திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் கார்த்திகை தீப திருவிழா

டிசம்பர் 11,2019  IST

Comments

சிங்கப்பூர் சிவாலயங்களில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. மார்ஷலிங் ஸ்ரீ சிவ கிருஷ்ணர் ஆலயத்தில் டிசம்பர் 10 ஆம் தேதி கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது. காலையில் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்திய குடம் குடமான பால் அபிஷேகத்ததுடன் வாசனாதித் திரவியங்களால் விசேஷ அபிஷேகம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது. பக்தர்கள் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தனர். வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷம் முழங்க மகா தீபாராதனை சமர்ப்பணம் செய்யப்பட்டது.

மாலையில் தீபங்களுக்கான கலச பூஜை நடைபெற்று அனைத்து சன்னதிகளிலும் தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து சர்வ அலங்கார நாயகராக சுவாமி – தெய்விக நாதஸ்வர இசையுடன் ஆலயம் வலம் வந்தார். சஹானா ராகம் – ஆதி தாளத்துடன் வித்துவான்கள் இசை சமர்ப்பிக்க தலைமை அரச்சகர் நாகராஜ சிவாச்சாரியார் மகா தீபாராதனை செய்த போது பக்தர்கள் மனமுருகி அரோகரா முழக்கமிட்டனர். ராஜ கோபுரத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டபோது அரோகரா கோஷம் அடங்க நெடுநேரமாயிற்று. ஆலய வாசலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப் பானைக்குத் தலைமை அர்ச்சகர் பூஜை செய்த பின் சொக்கப்பானை கொழுத்தப்பட்டது.

தொடர்ந்து சபா மண்டபத்தில் சுவாமி ஆனந்தத் தாண்டவமாடிக் காட்சியளித்து பக்தர்களுக்கு அபயம் அளித்தார். பங்கு கொண்ட அனைவருக்கும் அன்னதானப் பிரசாதம் வழங்கப்பட்டது. ஆலய மேலாண்மைக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். தமிழர்தம் இல்லங்களிலும் தீபமேற்றி வழிபாடு செய்ததைக் காண முடிந்தது. பெருந் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனருள் பெற்றுச் சென்றனர்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)