நைஜீரியாவில் திருக்கார்த்திகை தீப வழிபாடு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நைஜீரியாவில் திருக்கார்த்திகை தீப வழிபாடு

டிசம்பர் 11,2019  IST

Comments

லேகோஸ்: நைஜீரியா, லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதற்கு முன் தினம் திங்கட்கிழமை கார்த்திகை மாதம் சோமவார பிரதோஷ வழிபாட்டோடு களைகட்டியது. சிவகுமார் சிவாச்சாரியார் சிவபெருமானுக்கு செய்த அலங்காரம் மிகவும் சிறப்பாக விளங்கியது. திருக்கார்த்திகை அன்று காலை ஶ்ரீ சுப்பிரமணியருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் மஹாதீபாராதனையோடும் மாலையில் 'சரவணபவ' எனும் திருமந்திரத்திலான கோலத்தில் 108 நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபாடு நடந்தது. தீபஜோதியின் பிரகாசத்தில் அஞ்ஞானம் மறைந்து ஞானம் என்னும் ஒளி வீசி அகக்கண்ணை திறக்க ப்ரார்தனை செய்து கொண்டனர் பக்தர்கள்.

- நமது செய்தியாளர் ஶ்ரீவித்யா ஆனந்தன்

Advertisement
மேலும் ஆப்பிரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)