ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் தீபத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஶ்ரீ தண்டாயுதபாணி ஆலயத்தில் தீபத் திருவிழா

டிசம்பர் 12,2019  IST

Comments

சுமார் 160 ஆண்டுத் தொன்மையும் வரலாற்றுச் சிறப்பும் மிக்க சிங்கப்பூர் அருள்மிகு தண்டாயுதபாணி ஆலயத்தில் கார்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. வைகறையில் பக்தப் பெருமக்களின் அரோகரா கோஷத்திடையே தீபம் ஏற்றப்பட்டது. பக்தர்கள் பால் குடம், பால்காவடி, புஷ்பக் காவடி, ரதக்காவடி, அலகுக் காவடி என நூற்றுக் கணக்கில் காலையிலிருந்து அணிவகுத்து வந்து சமர்ப்பித்தது கண்கொள்ளாக் காட்சியாகும். அருள்மிகு தண்டாயுதபாணி வேல் தாங்கி நின்ற கோலத்தில் அருள்பாலித்தார்.

உச்சிக் கால பூஜையில் சண்முகார்ச்சனை பக்தர்களைப் பரவசத்தில் ஆழ்த்தி “ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா “ கோஷத்தை முழங்கச் செய்தது. மாலையில் சர்வ அலங்கார நாயகராக கந்த வேல் ஆலயம் வலம் வந்து அபயம் அளித்தார். பெருந் திரளான பக்தப் பெருமக்கள் கலந்து கொண்டு தண்டாயுதபாணி சுவாமி அருள் பெற்றுச் சென்றனர். ஆலய மேலாண்மைக் குழுவினர் சிறப்பாக ஏற்பாடுகளைச் செய்திருந்தனர். பங்கேற்ற அனைவருக்கும் அருசுவை அன்னதானம் அளிக்கப்பட்டது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்



Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)