சிங்கப்பூர் ஆன்மிக தலைவருக்கு மலேசியாவில் விருது | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் ஆன்மிக தலைவருக்கு மலேசியாவில் விருது

டிசம்பர் 13,2019  IST

Comments

 கடந்த கால்நூற்றாண்டாக வைகானஸ ஆகம நெறிநின்று பல்வேறு ஹோமங்கள், யாகங்கள், ஆலய கும்பாபிஷேகங்களைத் தமிழகத்திலும் சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற வெளிநாடுகளிலும் நடத்தி வைத்து ஆன்மிக இறைப்பணி ஆற்றி வருபவர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சாரியார். சிங்கப்பூரின் பிரபல வைணவத் தலமான ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஆலயத்தில் இருபது ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி பக்தப் பெருமக்களின் பாராட்டைப் பெற்றவர்.

தற்போது சிங்கப்பூர் சாங்கி ஶ்ரீ ராமர் ஆலயத் தலைமை அர்ச்சகராக உள்ள ஶ்ரீநிவாசபட்டாசார்யார், சென்ற மாதம் மலேசியாவின் பிரபல பத்துமலைத் திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அலர்மேல் மங்கா சமேத ஸ்ரீ வேங்கடாசலபதி மற்றும் ஸ்ரீ பக்த ஆஞ்சநேயர் திருக்கோயில் ஆகியவற்றின் மகா சம்ரோக்ஷனத்தையொட்டி பாலஸ்தாபனம், யாகசாலை பூஜைகள் மற்றும் மஹா சம்ரோக்ஷனம், மஹா கும்பாபிஷேகம் ஆகியவற்றை வெகு விமரிசையாக  நடத்தி வைத்தார். இவ்வைபவங்கள் மலேசியா பக்தர்களிடைப் பெரும் பாராட்டைப் பெற்றன.

கோலாலம்பூர் ஸ்ரீ கோட்டை விநாயகர் ஆலயம், ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் போன்ற பிரபல ஆலயங்களின் மேலாண்மைக்குழுத் தலைவர் டான்ஸ்ரீ டத்தோ ஆர் நடராஜன் தலைமையில் நடைபெற்ற விழாவில் ஸ்ரீ ஸ்ரீநிவாச பட்டாச்சார்யாரின் ஆலய, சமய, ஆன்மிக சேவைகளைப் பாராட்டி “ ஸ்ரீ வைகானஸ சேவா ரத்னம் “ என்ற விருதளித்து கவுரவிக்கப்பட்டது. பலத்த கரவொலிக்கிடையே பெற்றுக் கொண்ட ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் தமக்களிக்கப்பட்ட பாராட்டுக்கு நன்றி தெரிவித்து, இவ்விருது தமக்கு மென்மேலும் இறைப்பணியாற்ற புதிய தெம்பையும் உத்வேகத்தையும் அளித்திருப்பதாகத் தெரிவித்து பாராட்டிய அனைவருக்கும் இறையருள் சகலவித சௌபாக்கியத்தையும் அளிக்கப் பிரார்த்திப்பதாகத் தெரிவித்தார்.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்

ஜனவரி 25ல் ஜெர்மனியின் மூன்சன் நகரில் பொங்கல் விழா- வெள்ளோட்டமாய் இந்த முன்னோட்டம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)