பிரான்ஸில் கோயில் ஆண்டுவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸில் கோயில் ஆண்டுவிழா

டிசம்பர் 14,2019  IST

Comments

 பிரான்ஸல் கார்ஜ் லெ கொன்னஸ் (Garges les Gonesse ) என்ற இடத்தில் அமைந்துள்ள அரூள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் சுந்தர சபரிகிரீசன் திருகோயில் 14 ஆம் ஆண்டு நிறைவு விழா விகாரி வருடம் கார்த்திகை மாதம் 21 அன்று(07 / 12 / 2019) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. இறைவனுக்கு சிறப்பு அபிஷேகமும், அர்ச்சணையும் சிறப்புபடி பூஜையும்அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.பக்தர்களின் ஐய்யப சரண கோஷமும் பக்தி பாடல்களும் அனைவரையும் பரவசப்படுத்தியது.அதனை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு இறைப்பணியில் அதிகமாக தங்களை ஈடுபடுத்தி பங்கு கொண்டு திருகோயில் வளர்ச்சிக்கு ஆதரவு நல்கிய மெய்யன்பர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.அனைவருக்கும் அன்னதான அருள்பிரசாதம் வழங்கப்பட்டது. குருசாமி திரு சுந்தர மணிகண்டன், திருக்கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் ஆன்மீக தியான பேரவையினர் இணைந்து செய்திருந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற்று சென்றனர். 


- நமது செய்தியாளர் ஜெய கௌரி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)