பிரான்ஸில் இருமுடி கட்டு விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பிரான்ஸில் இருமுடி கட்டு விழா

டிசம்பர் 25,2019 

Comments

பிரான்ஸில் கார்ஜ் லெ கொன்னஸ் (Garges les Gonesse) என்ற இடத்தில் அமைந்துள்ள அரூள்மிகு ஸ்ரீ சுந்தர விநாயகர் சுந்தர சபரிகிரீசன் திருகோயில் 15 ஆம் ஆண்டு இருமுடி கட்டு, பேட்டை துள்ளல், நெய்யபிஷேகம் சிறப்பு பூஜை தரிசன விழா விளம்பி வருடம் மார்கழி மாதம் 5 ஆம் நாள் அன்று (21 / 12 / 2019) மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. திரு சுந்தர இரத்தின சபாபதி அவர்களின் மனைவி திருமதி சுந்தர இரத்தின சபாபதி சுசிலாபாய் அவர்கள் முன்னிலையில் விரதமிருந்த ஐயப்ப சுவாமிகள் குருசாமி திரு மணிகண்டன் சாமியிடம் இருமுடி கட்டி கொண்டனர். 

தொடர்ந்து பேட்டை துள்ளல், மற்றும் நெய்யபஷேகம் நடைபெற்றது.பக்தர்கள் ஐயனின் நெய் அபிஷேகத்தை கண் குளிரக கண்டு மகிழ்ந்தனர்.சிறப்பு படி பூஜையின் போது பக்தர்கள் பக்தி பாடல்கள் பாடினர். பங்கேற்ற அனைவருக்கும் நெய்யபிஷேக பிராசதமும் அன்ன தான அருள் பிராசதமும் வழங்கப்பட்டது.திரு கிருஷ்ணன் பார்த்த சாரதி, திரு ஸ்ரீநிவாசு, திரு குகராஜ் சாமி, தினேஷ் சாமி, வினோத் சாமி தஙகளை ஈடுபடுத்தி ஐயனின் இருமுடி கட்டு விழாவினை சிறப்பாக நடத்தி வைத்தனர்.

குருசாமி திரு சுந்தர மணிகண்டன், திருக்கோயில் நிர்வாக குழுவினர் மற்றும் ஆன்மீக தியான பேரவயினர் இணைந்து செய்திருந்த இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று இறையருள் பெற்று சென்றனர்.


- நமது செய்தியாளர் ஜெய கௌரி

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us