ஜனவரி 7 வரை சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜனவரி 7 வரை சிங்கப்பூர் ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம்

ஜனவரி 04,2020  IST

Comments

சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் ஸ்ரீ வைகுண்ட ஏகாதசி மஹோற்சவம் டிசம்பர் 28 ஆம் தேதி முதல் ஜனவரி 7 ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது. காலை - மாலை இரு வேளைகளிலும் தசாவதார மஹா யக்ஞம் நடைபெறும் ஜனவரி 6 ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி வைபவத்தை முன்னிட்டு காலை 5 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி பூஜையும் தொடர்ந்து ஆறரை மணிக்கு சொர்க்க வாசல் திறப்பும் நடைபெறும். பின்னர் கோ தரிசனமும் - கோ பூஜையும் தொடர்ந்து மஹா யாகமும் நடைபெறும் . இன்னிசை மற்றும் கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளன. 7 ஆம் தேதி வைகறையில் சுப்ரபாத பூஜை நடைபெற்று மஹா யாகம் நிறைவு செய்யப்படும். இவ்வாலயத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் ஸ்ரீ சீதா - லட்சுமண - ஹனுமந்த் சமேத ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்திக்கு விசேஷ திருமஞ்சனம் - அபிஷேகம் ஆராதனை நடைபெறும். ஆறரை மணிக்கு துவாதசி அன்னதானமும் நடைபெறவுள்ளது. பக்தப் பெருமக்கள் திரளாகக் கலந்து கொண்டு ஸ்ரீ ராமச்சந்திரமூர்த்தியின் திருவருளைப் பெற்றுய்யுமாறு தலைமை அர்ச்சகர் வைகானஸ யஷோ பூஷணம் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் மற்றும் ஆலய நிர்வாகம் அழைக்கிறது.

- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

துபாயில் நடந்த ரத்ததான முகாம்

துபாயில் நடந்த ரத்ததான முகாம் ...

ஜனவரி 18 சர்வதேச கபடி தினமாக அறிவிப்பு

ஜனவரி 18 சர்வதேச கபடி தினமாக அறிவிப்பு ...

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல்

லேகோஸ் ஶ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பொங்கல்...

ஷார்ஜாவில் ஸ்டீல் பேப்ரிகேஷன் தொடர்பான வர்த்தக கண்காட்சி

ஷார்ஜாவில் ஸ்டீல் பேப்ரிகேஷன் தொடர்பான வர்த்தக கண்காட்சி ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)