ஒமஹா பிரசன்ன கணபதி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஒமஹா பிரசன்ன கணபதி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதேசி

ஜனவரி 08,2020  IST

Comments

நெப்ராஸ்கா: அமெரிக்கா, ஒமஹா அருள்மிகு பிரசன்ன கணபதி ஆலயத்தில் இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதேசி மிகச் சிறப்பாக நடைபெற்றது. ஏகாதேசி தினத்தன்று விடியற்காலை 6 மணிகள் முதல் நடைபெற்ற இந்த விழாவில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்கள். விடியற்காலையில் எம்பெருமான் வெங்கடாசலபதிக்கு மிகச் சிறப்பான அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. எம்பெருமான் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தை வலம் வந்தார். 

விடியற்காலையிலிருந்து காத்திருந்த பக்தர்கள் அனைவரும் பரமபதவாசல் வழியாக எழுந்தருளிய பெருமானை தரிசித்து கோவிந்தா! 'கோவிந்தா!! என்ற கோஷத்தோடு பக்தி பரவசத்துடன் பரமபதவாசல் வழியாக நுழைந்து பெரும் பாக்கியம் அடைந்தனர். கோயில் நிர்வாகத்தினர் வைகுண்ட பரமபதவாசலை நேர்த்தியாக. அமைக்கின்றனர். கடும் குளிர் இருந்த போதும் பக்தர்கள் அனைவரும் விடியற்காலையில் முதலே ஆலயத்தில் காத்திருந்து வைகுண்ட ஏகாதேசி அனுஷ்டித்து மகிழ்ச்சி அடைந்தனர்.


- நமது செய்தியாளர் சிதம்பரநாதன் அழகர்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)