கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் நடத்திய 'பறையிசை பயிற்சிப் பட்டறை' | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

கொலம்பஸ் தமிழ்ச் சங்கம் நடத்திய 'பறையிசை பயிற்சிப் பட்டறை'

ஜனவரி 08,2020  IST

Comments (1)

மனிதர்கள் முதல் விலங்குகள் வரை இசைக்கு மயங்காதோர் உண்டோ! மெல்லிய இசைக்கே, நாடியில் வாசம் புகுந்தால் மூச்சிழுத்து ரசிப்பது போல் ரசிக்கும் நாம், உடம்பின் நாடி நரம்பெல்லாம் கிளர்ந்தெழச் செய்யும் பறையோசையைக் கேட்டால் சும்மா இருப்போமா? துள்ளாத மனமும் துள்ளுமல்லவா!கடந்த வருடம் கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்தில் வந்து சிறப்பானதொரு 'பறையாட்டம்' வழங்கிய புகழ்பெற்ற கனக்டிகட் 'மானுடம் பறை அணியினர்' அனைவரின் கவனத்தை ஈர்க்கவே, ஒஹேயோ தமிழர்களுக்கும் அதனைக் கற்றுக் கொள்ளும் ஆர்வம் தோன்றியது. 

இவர்களின் அன்பான கோரிக்கையை ஏற்று மானுடம் பறையணியினர்,முதன் முதலாக கடந்த மாதம் டிசம்பர் 21 ,22 தேதிகளில் கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்திற்கு வந்து, பறையாட்டத்திற்குரிய முறையான பாடத்திட்டத்துடன் அழகாய்க் கற்றுக்கொடுத்தனர். பறையின் மேல் காதல் கொண்ட ஒஹேயோ தமிழர்களோ, கற்பூரம் போல பற்றிக்கொண்டு ஒரே நாளில் இசைக்கேற்ப ஆடக் கற்றுக்கொண்டனர்.இவர்களுக்காவே புதிய பறைகள் இந்தியாவிலிருந்து வரவழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது! அதனால் மிகுந்த உற்சாகம் அடைந்தனர் பயின்ற மக்கள்.

இரண்டாம் நாள் தங்கள் குடும்பங்கள் அமர்ந்திருந்து பார்க்க, தாங்கள் கற்றுக்கொண்டதை மிக அழகாய் ஆடிக்காட்டியது அனைவருக்கும் பெருமிதத்தைக் கொடுத்தது! கனக்டிகட்டிலிருந்து வந்து, இங்குள்ளோருக்கு நன்கு பயிற்சி அளிக்க உதவிய கொலம்பஸ் தமிழ்ச் சங்கத்திற்கு மனமார்ந்த நன்றிகளை பறையாட்டம் பயின்ற அனைவரும் தெரிவித்துக்கொண்டனர்.


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Chidam Alagar - Omaha,United States
09-ஜன-202004:08:32 IST Report Abuse
Chidam Alagar மானுடம் பறை அணியினர் தொடர்பு தெரியப்படுத்தவும் - chidam.alagar@gmail.com, Omaha, NE
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)