மினசோட்டாவில் ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் மரபு மாதம்' என பிரகடனம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மினசோட்டாவில் ஜனவரி மாதம் 'தமிழ் மொழி மற்றும் மரபு மாதம்' என பிரகடனம்

ஜனவரி 09,2020  IST

Comments

உலகெங்கும் வாழும் தமிழர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவினை இனிதே கொண்டாடப் போகும் இவ்வேளையில் 2020 சனவரி மாதம் முழுவதும் 'தமிழ் மொழி மற்றும் மரபு திங்கள்' ஆக அறிவித்து வடஅமெரிக்காவில் உள்ள மினசோட்டா மாநில ஆளுநர் 'திரு.டிம் வால்ச்' பிரகடனம் செய்துள்ளார். இதற்கான பிரகடனத்தில் டிசம்பர் 31 ஆம் தேதியன்று கையெழுத்திட்டு, மினசோட்டா மாகாண முத்திரை பதித்த ஆவணத்தை மினசோட்டா தமிழ் சங்கத்திடம் பகிர்ந்திருக்கிறார். 

இது மினசோட்டா வாழ் தமிழர்களுக்கு மொழி மற்றும் அவர்கள் பின்பற்றும் வரலாற்று தொன்மை மிக்க மரபிற்கும் கிடைத்த மிகப்பெரிய அங்கிகாரம் ஆகும்.

பல்வேறு நாட்டு இனக்குழுக்கள், பல்வேறு மொழி பேசும் வட அமெரிக்க மண்ணில், அரசே, மக்கள் கொண்டாடும் விழா, மற்றவர்களும் அறிந்துக்கொள்ள நினைக்கும் நிகழ்வை பிரகடனமாக வெளியிடுகிறது. மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட இந்தப் பிரகடனத்தில் தமிழ் மொழியின் 2600 ஆண்டுக்காலத் தொன்மை, மினசோட்டாவின் இருமொழி முத்திரை பெறுவதில் தமிழ் மக்களின் பங்கேற்பு, தமிழ்மொழி கல்வியில் சுயச் சார்பை செயல்படுத்துதல், தமிழ்மொழி மற்றும் தமிழ்க் கலைகளை மினசோட்டாவில் வளர்த்தெடுப்பது, தமிழ் மாதமான தையின் தொடக்கத்தில் முதல் 4 நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுவது, இந்த விழாவில் மினசோட்டாவில் வசிக்கும் அனைத்து மக்களையும் வரவேற்று பங்குகொள்ள அழைத்தல் போன்ற சிறப்புச் செய்திகள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

இந்தப் பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளபடி, நமது தமிழ்மொழி மற்றும் மரபு குறித்த சிறப்புகளை, இந்த மாநில, மற்றும் பிற மாநில மக்கள், பிற மொழி பேசும் இனத்தவர்கள், அனைவரும் அறிந்துக்கொள்வார்கள். இந்தச் செய்தி ஊடகங்களால், நாடெங்கும் சென்றடைந்துள்ளது. இது போன்ற அரசு அங்கீகாரங்கள் மற்றும் வாழ்த்துகள், நமது அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கும், தமிழ் மொழியின் சிறப்பையும், பெருமையையும் கொண்டு சென்று, அது குறித்த நம்பிக்கையளிக்கும் என்பதும், உலகமெங்கும் உள்ள தமிழ்ப் பற்றாளர்களை மேலும் தமிழுக்காகத் தொண்டாற்ற ஊக்கமளிக்க வகை செய்யும்.

மினசோட்டாத் தமிழ்ச் சங்கமானது தொடர்ந்து 12 ஆண்டுகளாக மினசோட்டாவில் தமிழ் மொழி சார்ந்தும், தமிழ் கலைகள் சார்ந்தும் நிகழ்வுகளை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது. 

உதாரணமாகத் தோல்பாவை கூத்துக் கலைஞர் திரு. அம்மாபேட்டை கணேசன், நாடகக்கலைஞர் திரு. வேலு சரவணன், தமிழிசை கலைஞர் திரு. திருபுவனம் ஆத்மநாதன் ஐயா, திரு. சீர்காழி சிவசிதம்பரம், திரு.புஷ்பவனம் குப்புசாமி, திரு. ஈரோடு தமிழன்பன், திரு. சகாயம் ஐஅகு, திரு. மயில்ச்சாமி அண்ணாதுரை, திரு. சிலம்பொலி செல்லப்பனார், தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறை கலைஞர்கள் மற்றும் எண்ணற்ற பல தமிழ் நாட்டுப்புற இசைக் கலைஞர்களை, தமிழ் இலக்கியப் பேச்சாளர்களைத் தொடர்ந்து மினசோட்டாவிற்கு அழைத்து வந்து நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டு இருக்கிறோம். தமிழ் கலைகளை இங்குள்ளவர்கள் கற்றுக்கொள்ளப் பல வழிகளை ஏற்படுத்திக்கொடுத்து வந்துள்ளோம். 

இந்த ஆண்டு பொங்கல் விழாவானது சங்கமம் விழாவாக ஜனவரி 18ஆம் தேதியன்று கொண்டாடப்பட உள்ளது. இவ்விழாவில் பல்வேறு தமிழர்க் கலை நிகழ்ச்சிகளும், மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி மாணவர்கள் பங்கு பெரும் மாவீரன் இராசேந்திரன் வரலாற்று நாடகம், குரலற்றவர்களின் குரல் என்ற சமூக நாடகம், ஆடல், பாடல் என்று அனைத்து நிகழ்ச்சிகளும் சங்கமிக்க உள்ளது. மேலும் இவ்விழாவில் மினசோட்டா அரசு மற்றும் பிற அமைப்புகளின் தலைமைப்பொறுப்பில் உள்ளவர்கள் கலந்து கொள்கிறார்கள். அவர்கள் முன்னிலையில் மினசோட்டா தமிழ் மக்கள் மத்தியில் இந்தப் பிரகடனத்தை வாசித்து, அந்த மகிழ்வைப் பகிர்ந்துக்கொள்ள இருக்கிறோம். அத்தகைய வரலாற்று சிறப்பு மிக்க விழாவில் உங்கள் அனைவரையும் கலந்து கொள்ள மினசோட்டாத் தமிழ்ச் சங்கத்தின் சார்பாக அழைக்கிறோம். 


 - தினமலர் வாசகர் சுந்தரமூர்த்தி

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)