சிங்கப்பூரில் ஸ்ரீ கூடாரவல்லி - பாவை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூரில் ஸ்ரீ கூடாரவல்லி - பாவை விழா

ஜனவரி 13,2020  IST

Comments (1)

 மாதங்களில் நான் மார்கழியாவேன் என்றார் பகவான். இந்த தெய்விகத் திங்களில் வைகறையில் எழுந்து நீராடி தங்களுக்கு நல்ல கணவன் கிடைக்குமாறு வேண்டி கன்னிப் பெண்கள் இறைவனைத் தொழுது பாவை நோன்பு மேற்கொள்ளுவது வழக்கம். இந்த வைபவத்தை ஸ்ரீ கூடாரவல்லி விழாவாக வைணவத் தலங்களிலே கொண்டாடுவர். ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் எம்பெருமானோடு சேர்ந்து எல்லோரோடும் சேர்ந்து பாடுவது கூடாரவல்லி 27 ஆவது பாசுரம். ஆண்டாள் திருக் கல்யாணம் போன்றே ஆலயங்களில் செய்வது மரபு. 


சிங்கப்பூர் சாங்கி ஸ்ரீ ராமர் ஆலயத்தில் இவ்வைபவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஸ்ரீ ஆண்டாள் நாச்சியார் சர்வ அலங்கார நாயகியாக வசந்த மண்டபத்தில் எழுந்தருளி அருள்பாலிக்க மங்கல மகளிர் வரிசை எடுத்து ஆலயம் வலம் வந்து சமர்ப்பித்தனர். தலைமை அர்ச்சகர் அம்மன்குடி வெ.ஸ்ரீநிவாச பட்டாச்சார்யார் பாவைப் பாடல் 30 பாசுரங்களையும் பாட பக்தப் பெருமக்கள் பரவசத்தோடு பின் தொடர்ந்து பாட ஒவ்வொரு பாசுரத்திற்கும் ஆராதனை செய்யப்பட்டு தளிகை சார்த்தி வழிபட்ட காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும். ஒவ்வொரு பாடலும் இவ்வாறு சேர்ந்திசைத்தது மெய் சிலிர்க்க வைத்தது. பெருந் திரளான பக்தர் பங்கேற்று இவ்வைபவத்தைச் சிறப்பித்தார்கள். கலந்து கொண்ட அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

-


 நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை

ஜனவரி 18 ல் இந்து சமய தமிழ்ப் பேருரை...

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்

ஜனவரி 18 ல் ஆக்லாந்து தமிழ் கழக பொங்கல் திருநாள்...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Mal - Madurai,India
14-ஜன-202015:08:14 IST Report Abuse
Mal Good to know.... Am reminded of a telugu aunty who first told me about this festival.....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)