துபாய் - கலாட்டா குடும்பம் பொங்கல் திருவிழா 2020 | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் - கலாட்டா குடும்பம் பொங்கல் திருவிழா 2020

ஜனவரி 19,2020  IST

Comments

துபாயில் வசிக்கும் தமிழர்கள் பொங்கல் பண்டிகையை பாரம்பரிய முறைப்படி உற்சாகமாக கொண்டாடினர். கடல் கடந்து வாழ்ந்தாலும் அமீரகத்தில் வசிக்கும் தமிழர்கள் பாரம்பரிய பொங்கல் பண்டிகையை கொண்டாட தவறுவது இல்லை.

துபாயில் கொண்டாட்டம்: தாய்நாட்டிற்கு சென்று பொங்கல் பண்டிகையைக் கொண்டாட முடியாதவர்களுக்கு 'கலாட்டா குடும்பம்' என்ற அமைப்பு துபாயில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்க்கான ஏற்பாடு செய்திருந்தது.. தமிழக குடும்பத்தினர் காலை 8 மணி முதலே பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்க்காக முஷ்ரிப் பூங்காவுக்கு வரத்தொடங்கினர். ஆண்கள் வேட்டி சட்டை, பெண்கள் பட்டுப்புடவை மற்றும் குழந்தைகள் பாட்டுபாவாடை அணிந்திருந்தனர்.

பொங்கல் வைத்த பெண்கள்: கோலம் போடுதல் மற்றும் அலங்காரம் செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பெண்கள் செய்தனர் . இதனால் அந்த பகுதி விழாக்கோலம் பூண்டிருந்தது. இதையடுத்து தமிழக பாரம்பரிய முறைப்படி மண் அடுப்பில் மண்பானையை வைத்து அதில் பெண்கள் பொங்கல் செய்தனர். அது பொங்கிவரும்போது பெண்கள் அனைவரும் 'பொங்கலோ பொங்கல் ' என ஒன்றுசேர குரலெழுப்பி, கும்மி அடித்து ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து தங்களின் குலதெய்வத்தை வணங்கிவிட்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். அனைவருக்கும் பொங்கலுடன் கூடிய மதிய உணவு வழங்கப்பட்டது.

மதிய உணவு சாப்பிட்டவுடன் சிறிது நேரம் கழித்து பாரம்பரிய சிறப்பு விளையாட்டுகளான கயிறு இழுத்தல், பச்சக்குதிரை, பள்ளாங்குழி, கல் ஆட்டம் , பம்பரம் விடுதல், குச்சிப்புடி விளையாட்டு, சாக்கு ஓட்ட போட்டி உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் காலை சிற்றுண்டி முதல், மதியம் சாப்பாடு மற்றும் மாலை டீ மற்றும் சமோசா வழங்கப்பட்டது.இதற்கான ஏற்பாடுகளை கலாட்டா குடும்பம் அமைப்பை சேர்ந்த ரவி, கோமதி ரவி உள்ளிட்ட குழுவினர் செய்திருந்தினர்.


- தினமலர் வாசகி கோமதி ரவி

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)