குரோய்டன் தமிழ்க் கழக பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

குரோய்டன் தமிழ்க் கழக பொங்கல் விழா

ஜனவரி 23,2020 

Comments

லண்டன் குரோய்டன் தமிழ்க் கழகத்தில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. பெற்றோர்களும் மாணவர்களும் பாரம்பரிய உடையில் திரளாக கலந்து கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி விழாவை தொடங்கி வைத்தனர் . திரு சேதுராமன் கணபதி அவர்கள் விழாவை தொகுத்து வழங்கினார் . வர்ஷா , ஹனிதா மற்றும் அக்க்ஷிதா வரவேற்பு நடனம் ஆடினார்கள். அதனை தொடர்ந்து பள்ளி மாணவர்கள் தங்கள் கொஞ்சும் தமிழில் ஆத்திச்சூடி மற்றும் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டிகளில் கலந்து கொண்டனர். 

பள்ளி நாட்களில் நடை பெற்ற ஓவிய போட்டி மற்றும் கட்டுரை போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டது. மாணவர்களுக்கு மாறுவேட போட்டி, கைமொழி விளையாட்டும் நடைபெற்றது. ஆசிரியர்கள் பெற்றோர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் போட்டிகளுக்கு நடுவர்களாக மதிப்பீடு செய்தனர். திரு.கோதண்டராமன் அவர்களின் பள்ளியான 'தளிர் தமிழ் கல்விக்கூடம்” சிறுவர்கள் சிறப்பு நிகழ்ச்சியாக பாரதியார் பாடலை பாடினார்கள். சிறப்பு விருந்தினராக 'சட்டன் தமிழ்ப்பள்ளி” திரு. பூங்குன்றன் அவர்கள் கலந்து கொண்டார். 

உறியடி இல்லாமல் பொங்கல் விழா உண்டோ !!!!!........நவீன உறியடியில் குழந்தைகள் குதூகலமாக கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு கோப்பைகளை விழா விருந்தினர்கள் வழங்கினார்கள். கலந்து கொண்ட அனைத்து மாணவர்களுக்கு 'அகர வரிசை கதைகள்” புத்தகம் வழங்கப்பட்டது. திரு. பாஸ்கர் அவர்கள் விழாவின் இடையே புத்துணர்வுக்காக தேநீர் , குழந்தைகள் பானங்கள் மற்றும் பிஸ்கட்கள் அன்புடன் வழங்கினார் . சிறப்பான இரவு விருந்துடன் விழா இனிதே முடிந்தது.


- தினமலர் வாசகர் பன்னீர்செல்வம் தங்கவேல்


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us