எல்லாம் சிவம் என எண்ணுவோம் - ஏற்றத் தாழ்வற்ற உலகம் மலரும்: தவத்திரு மருதாசல அடிகளார் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

எல்லாம் சிவம் என எண்ணுவோம் - ஏற்றத் தாழ்வற்ற உலகம் மலரும்: தவத்திரு மருதாசல அடிகளார்

ஜனவரி 23,2020  IST

Comments

எல்லாம் சிவம் என்று நினைக்கத் தொடங்கி விட்டால் பல்வேறு வகையான ஏற்றத்தாழ்வுகள் களையப்பட்டு விடும். இவ்வாறு நினைக்கும் போது ஓரறிவு - ஈரறிவு - ஐந்தறிவு உள்ள எதற்கும் துன்பம் செய்ய மாட்டோம். ஆறறிவுள்ள மனிதரிடத்திலும் பேதமை காட்ட மாட்டோம்என்று 20 ஆம் த்தேதியன்று குவின்ஸ்வே அருள்மிகு முனீஸ்வரன் கோயிலில், ‘எல்லாம் சிவனென நின்றாய் போற்றிஎன்ற தலைப்பில், பேரூர் ஆதீனம் தவத்திரு மருதாசல அடிகளார் உரையாற்றினார்.

அவர் மேலும் தமது உரையில், “பேதமை நீங்கி இன்பத்தைக் காண்பதுதான் அறிவு. இரண்டு கம்பிகளிலிருந்து வரும் மின்சாரம் காற்றாக - ஒளியாக - ஒலியாக மற்றவையாக வருவது போல் இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்து உள்ளிருந்து உணர்த்துகிறார்.. இதைத்தான் தாயுமானவர் சுவாமி அங்கிங்கிங்கெனாதபடி எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறார் என்றார்.

'இறைவன் எட்டு வடிவமாக உள்ளார். பஞ்சபூதங்களாகவும் திகழ்கிறார். எல்லா அணுக்களுக்குள்ளும் அணுக்களுக்கு அப்பாலாயும் இருந்து அருள்பாலிக்கிறார். ஆட்டுவிப்பவரும் அவரே. எல்லாமாக இருந்து நெறிப்படுத்துபவரும் அவரே. இறைவன். நீராக - நெருப்பாக - காற்றாக - ஞாயிறாக - திங்களாக - விண்ணாக - மண்ணாக - இன்றாகி - நாளையாகி எல்லாமாக இருக்கிறார். அருவ நிலை - உருவ நிலை - அரூப நிலையிலிருந்து படிப்படியாக நம்மைப் பக்குவப்படுத்தி அதற்கேற்றவாறு பரிபாலிக்கிறார். சிவ பரம்பொருளே அடிப்படையாக இருந்து அருள்புரிகிறார்..பல்வேறு தெய்வ வழிபாடுகள் செய்தாலும் எல்லாவற்றுக்குள்ளும் இருப்பது சிவமே. சிவத்திலிருந்தே மற்ற தெய்வங்கள் சுடர்விடுகின்றன. சுடர் வேறு - ஒளி வேறு அல்ல. சுடர் பெருமான் . ஒளி அன்னை. ஒன்றுக்கொன்று பிரிக்க முடியாதவை. அன்பும் அருளுமாக அன்னையும் அப்பனுமாக விளங்குகின்றனர்.

'சிவலிங்கம் அருஉருவத் திருமேனி. படைத்தல் - காத்தல் - அருளல் - அழித்தல் போன்ற ஐந்தொழிகளோடு 36 தத்துவங்களையும் வழங்குகிறார். அடிப்பாகம் பிரம்ம பாகம். மேல் பாகம் விஷ்ணு பாகம்.. மும்மூர்த்திகளாக சிவலிங்கம் விளங்குகிறது. எனவே சிவபெருமானை வழிபாடுவது மும்மூர்த்திகளையும் வழிபடுவதற்கு ஒப்பாகும். இவ்விறைவனை அரளி - செவ்வரளி முதலிய எட்டு மலர்களால் அர்ச்சிக்க வேண்டுமெனச் சொல்லுகிறார்கள். ஆனால் இந்த எட்டு மலர்கள் எல்லா இடங்களிலும் கிடைக்குமா ? உலகில் எங்கிருந்தாலும் அர்ச்சிக்க வேறு எட்டு மலர்களும் சொல்லப்பட்டுள்ளன. அவை அன்பு - அறிவு - அருள் - ஐம்பொறி அடக்கல் - பொறை - வாய்மை - தவம் - கொல்லாமை. .இம்மலர்களைக் கொண்டு எங்கிருந்தாலும் அர்ச்சிக்க இயலுமல்லவா? எந்தக் கண்டத்திலிருந்தாலும் சாற்றலாம் அல்லவா ? எல்லோரையும் எல்லாவற்றையும் சிவமாகப் பார்க்கும் போது இந்த எண்வகை மலர்களால் அர்ச்சிக்கும் போது எல்லாம் சிவமாகத் தெரியும். இறையுணர்வு பொங்கித் ததும்புமல்லவா ? 'என அருள் மழை பொழிந்தார்.

அடிகளார் மேலும் பேசுகையில் ஆலயங்களில் செய்யப்படும் அபிஷேகப் பொருள்களைக் குறிப்பிட்டு அவற்றின் ஒவ்வொரு தத்துவங்களையும் உட்பொருளையும் விளக்கியமை யாரும் கேட்டிராத ஒன்றாகத் தெரிந்தது. மேலும் ஒரு கதை சொல்லும் போது ஆட்டுக்குட்டிகளிடையே வளர்ந்த சிங்கக்குட்டி தான் யார் என்பதே தெரியாமல் ' மே...மே ' என்று கத்திக் கொண்டிருந்தது. ஒருநாள் தண்ணீரில் அதன் முகத்தைக் காட்டி நீடு அல்ல - சிங்கம் என உணர்த்தியவுடன் கர்ஜிக்கத் தொடங்கியது.

'அது போல் நம்மை நாம் உணர வைப்பது தவம். தவம் என்றால் காட்டுக்குச் சென்று ஒற்றைக் காலில் நிற்பது அல்ல. உற்ற நோய் நோற்றல் - உயிர்க்கு உறுகண் செய்யாமை. அவ்வளவே. இந்த மெய்ஞானம் வந்து விட்டால் எல்லாப் பாகுபாடுமின்றி எல்லாம் சிவமென்ற நிலை எய்தலாம். எல்லாம் சிவ மயமாகி இன்புற்று 16 செல்வங்களும் நிறைவாகப் பெற்று நீடூழி வாழ வாழ்த்தி தமது அருளுரையைத் தவத்திரு அடிகளார் நிறைவு செய்தார்.

முன்னதாக ஆலயம் பூரண கும்ப வரவேற்பளித்து வரவேற்று வழிபாடு செய்வித்தது. ஆலய மேலாண்மைக் குழு சார்பில் பொன்னாடை போர்த்தி - பூ மாலை சாற்றி ஆசி பெற்றனர். மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமன் அறிமுக உரை நிகழ்த்தினார். இந்து சபைத் தலைவர் தி.ஜோதிநாதன் நன்றி நவில திரளான அன்பர்கள் கலந்து கொண்ட நிகழ்வு நிறைவு பெற்றது. பங்கேற்ற அனைவருக்கும் இறைப் பிரசாதம் வழங்கப்பட்டது.



- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)