பாடன் ரூஜில் பொங்கல் கொண்டாட்டம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

பாடன் ரூஜில் பொங்கல் கொண்டாட்டம்

ஜனவரி 24,2020  IST

Comments

அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் செயல்பட்டு வரும் பாடன் ரூஜ் தமிழ்ச் சங்கம் சார்பாக, பொங்கல் கொண்டாட்டம் கடந்த சனவரி 18 ஆம் தேதி மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. கடவுள் வாழ்த்துடன் துவங்கிய பொங்கல் விழாவில், மாதரும், மழலையரும் பொங்கலோ பொங்கல் என கும்மியடிக்க, ஆடவரும், அனைத்து வயதினரும் தமிழர்த் திருநாளில் ஒயிலாட்டம் ஆடி பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். பாடன் ரூஜ் வாழ் தமிழர் அனைவரும் திரளாய் பங்கெடுத்த இந்த கொண்டாட்டத்தில், குழந்தைகளின் தமிழ் அறிஞர்கள் அணிவகுப்பும், வாய்ப் பாட்டும், பெண்களின் பாரம்பரிய நடனமும் அனைவரையும் வெகுவாய் கவர்ந்தது. 

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாய், 'சமூக வலைத்தளங்கள் இன்றைய தலைமுறைக்கு வரமா? சாபமா?' என்கிற சீரிய தலைப்பில் நகைச்சுவை பட்டிமன்றம் களைகட்ட, தமிழர் விளையாட்டாம் உறியடியுடன் இவ்விழா இனிதே நிறைவேறியது.


- சங்கப் பொறுப்பாளர்கள் தீப்தி சார்லஸ், பெலினா ஆனந்த்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)