ஸ்வீடனில் பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஸ்வீடனில் பொங்கல் விழா

ஜனவரி 27,2020 

Comments

தென் ஸ்வீடன் தமிழ்ச் சங்கத்தினர் சிறப்பாக கொண்டாடினர். ஸ்வீடன் நாட்டின் தென்கோடியில் உள்ள மால்மோ, லுண்ட், ஹெல்சிங்போர்க் மற்றும் அருகிலுள்ள பிற நகர வாழ் தமிழ்க் குடும்பங்கள் ஒன்றிணைந்து தென் ஸ்வீடன் தமிழ்ச் சங்கம் சார்பாக நான்காம் ஆண்டு பொங்கல் விழாவினை மால்மோ மற்றும் ஹெல்சிங்போர்க் நகரங்களில் தமிழர் கலாச்சார முறைப்படி பாரம்பரிய உடை அணிந்து உற்சாகத்துடன் கொண்டாடினர். 

மங்களகரமான நாதஸ்வர இசை முழங்க, குத்துவிளக்கு ஏற்றி துவங்கிய விழா பலவித வண்ணமயமான கலை நிகழ்ச்சிகளுடன் களைகட்டியது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் வந்திருந்தனர். வயது பேதமின்றி அனைவரும் குழந்தைகளைப் போல் துள்ளலுடன் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். குழந்தைகள் வரைந்திருந்த பொங்கல் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. கலை நிகழ்ச்சிகளின் நடுவே சிறுசிறு போட்டிகள் உற்சாகத்துடன் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. புத்தாண்டு மற்றும் பொங்கல் பரிசாக, சங்கத்தின் உறுப்பினர்களுக்கு மாத நாட்காட்டி வழங்கப்பட்டது. 

சொந்த தேசம் விட்டு தொலை தூரத்தில் வசிக்கும் குடும்பங்கள் சொந்தங்களைப் போலும், சகோதரத்துவத்துடனும் ஒன்றிணைந்து கொண்டாடிய பொங்கல் விழா அறுசுவை விருந்துடன் இனிதே நிறைவுற்றது.


- தினமலர் வாசகர் கணேஷ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us