ஜெர்மனியில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஜெர்மனியில் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விழா

ஜனவரி 27,2020 

Comments

ஜெர்மனி தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட்டுடன் இணைந்து செயல்ப்படும் தமிழாலயங்கள் ஆண்டுதோறும் நடத்திவரும் தமிழர்திருநாள் தைப்பொங்கல்விழா, தமிழாலய ஆசிரியர்கள் மாணவர்கள் நிர்வாகிகள் அனைவரும் இணைந்து 'பொங்கலோ பொங்கல்' என்ற ஆரவாரத்துடன், மதகுருமார்களுடைய ஆசியுரையுடன் சுமார் 500 க்கு மேற்பட்ட பார்வையாளர்களோடு வெகு விமர்சையாக நடைபெற்றது.


2019 ஆம் ஆண்டு கேம்பிறிச் பல்கலைக்கழகம் முதல்முதலாக ஜெர்மனியில் நடத்திய தமிழ்மொழிக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரத் தேர்வில் தோற்றி சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டி அவர்களுக்கான மதிப்பளிப்பு நிகழ்வும், தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்ட் தமிழாலயத்தில் 2019அ நடாத்தப்பட்ட அனைத்துலகப் பொதுத்தேர்வில் வளர் தமிழ் 12 (உயர்தரம்) சித்திபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசில்களும் வழங்கி மதிப்பளிக்கட்ட நிகழ்வும், தமிழ்த்திறனாய்வுப் போட்டி 2019 ல் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசளிப்புகள் நடைபெற்றது.


பிரதம சிறப்பு விருந்தினர்களாக  பரமானந்தம் சுப்பிரமணியம், சுப்பையா லோகநாதன், இரவீந்திரநாத் வேலாயுதபிள்ளை இணைந்து சிறப்பித்தனர். தமிழ்க்கல்விக்கழகம் பிராங்பேர்டுடன் இணைந்து செயல்படும் தமிழாலயங்களின நிர்வாகிகள், ஆசிரியர்களுடன், தமிழாலய இணை ஆசிரியர்கள், தமிழாலய பழையமாணவர்கள், பெற்றோர்கள் ஆகியோர்களின் நெறியாக்கத்தில் சிறப்பு நடனங்கள், கவிதைகள், உரையாற்றல்கள், இசைநிகழ்வுகள் பண்டாரவன்னியன் நாடகம் போன்ற பல விஷேட நிகழ்வுகள் பெற்றோர்கள் பாதுகாவலர்கள் பார்வையாளர்களின் பலத்த கரகோசத்துடன் இடம்பெற்றன.


- தினமலர் வாசகர் ரத்னரூபன்


Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us