ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி சார்பில் தைப் பொங்கல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி சார்பில் தைப் பொங்கல்

ஜனவரி 30,2020  IST

Comments

ஜார்ஜியா மாநில, ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி சார்பில், தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் திருநாள் ஜனவரி மாதம் 12-ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை இனிதே வெகு சிறப்புடன் கொண்டாடப்பட்டது. விழாக்கோலம் பள்ளி வாசலில் இருந்தே அனைவரையும் வரவேற்றது. அழகான கோலத்துடன் பொங்கல் பானையும், கரும்பும், வாழ்த்தும் என தைத் திங்களில் மண்ணுலகில் உள்ள மானுடத்தை காக்கும் கதிரவனுக்கு நன்றி தெரிவித்தது. அன்பும் ஆனந்தமும் பொங்கிட, வானவேடிக்கை வெடித்து சிதறியது போல் அரங்கத்தின் இருபுறமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களும், அதன் நடுவே வண்ணமயமாய் ஒளிரும் நட்சத்திரமாய் 280-க்கும் மேற்பட்ட குழந்தைகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.


தமிழ் நாட்டு மக்களே பார்த்து வியக்கும் அளவிற்கு, பொங்கல் விழாவினை அமெரிக்காவில் காண வேண்டுமா? வாருங்கள் ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி பொங்கல் கொண்டாட்டத்திற்கு! நிகழ்ச்சி தொடங்கிய அழகையே அடுத்த பொங்கல் வரை பேசிக்கொண்டே போகலாம். தமிழ்த் தாய் வாழ்த்து, அமெரிக்க தேசிய கீதம், அதை தொடர்ந்து பங்கேற்பாளர்களின் அணிவகுப்பு, பள்ளி முதல்வரின் வரவேற்பு என தொடங்கியது விழா. நடன குழுக்கள் வானவில்லை எடுத்து உடை தைத்து உடுத்தியது போல வண்ண வண்ண உடை உடுத்தி வண்ணத்துப் பூச்சியாய், மானாய், மயிலாய் , பூவாய், புலியாய் ஆடிக்கொண்டு அணிவகுப்பு செய்து பார்வையாளர்களுக்கு உற்சாகத்தையும் கண்களுக்கு பரவசத்தையும் உண்டாக்கினார்கள். எட்டு குழுக்களாக குழந்தைகள் நடனம் மற்றும் ஒரு பெரியர்வர்கள் நடனம் இடம் பெற்றது.இவ்வருடம் 'இயற்கையைப் போற்றுவோம்” என பொங்கல் கொண்டாட்டத்தின் கருப்பொருள் அமைத்து, அத்தலைப்பிற்கு ஏற்ப ஒவ்வொரு குழுவும் மழை, மண், மரம் என்று இயற்கையை பாதுகாத்து, விவசாயத்தை போற்றும் விதமான கருத்துக்களை அவர்களின் பாடல்களிலும், நடனத்திலும், உடையிலும் பறைசாற்றினார்கள். பச்சைக்கிளி பாடும் பாட்டு என்று பாடிக்கொண்டே அழகான கோழிக் குஞ்சுகளாய் குழந்தைகள் அரங்கத்தில் அங்கும் இங்கும் ஓடி ஆடி பார்வையாளர்களை கொட்டாம்பட்டி கிராமத்திற்கே கூட்டி சென்றார்கள். கொக்கு பற பற என்று அரங்கத்திலே பட்டத்தை விட்டும், இயற்கை அன்னையைப் போற்றியும், பூவ பூவ பூவே என்று குட்டி குட்டி அரும்புகளும், மொட்டுகளும் அரங்கத்தை மரமாகவும் மலராகவும் அலங்கரித்து, மழைத்துளிகளின் சங்கமத்தை விழாவின் நடுவே கொண்டுவந்த பட்டு குழந்தைகள் அரங்கில் உள்ள அனைவரையும் மகிழ்வித்ததோடு, பொங்கலையும் இயற்கையின் மகத்துவத்தையும் இந்த நிகச்சியின் வாயிலாக அவர்களும் நன்கு உணர்ந்துள்ளார்கள் என அவர்களின் நடை, உடை, முக பாவனைகளால் உணர்த்தினார்கள்.


கலைநிகழ்ச்சிகள் முடிந்ததும், குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் அரங்கத்தில் ஆங்காங்கே வைக்கப்பட்ட இயற்கையுடன் இணைந்த பின்னணியில் காலத்தால் மனதை உருக வைக்கும் வல்லமை கொண்ட புகைப்படங்களை மகிழ்ச்சியுடன் எடுத்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியின் முடிவில் விருந்தினர் உற்பட அனைவருக்கும் சர்க்கரைப் பொங்கலும் கரும்பும் வழங்கப்பட்டது. இது போன்ற நிகழ்ச்சிகள் வாயிலாக புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் குழந்தைகள் மனதில் நம் பாரம்பரியத்தையும் அதன் முக்கியத்துவத்தையும் விதைத்துக் கொண்டிருக்கும் ஆல்ஃபரெட்டா தமிழ்ப் பள்ளி நிர்வாகத்தினரையும், ஆசிரியர்களையும் நாம் பாராட்டாமல் இருக்க முடியாது.


- தினமலர் வாசகி ரம்யா ராஜ்குமார்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)