செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

ஏப்ரல் 10,2020 

Comments

  ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இவ்வருடம் (2020) செப்டம்பர் மாதம் (September 11 - 13, 2020) மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது.  இதற்கான பணிகள் சகல மட்டங்களிலும் ஆரம்பமாகி திரைப்பட விழாவுக்கான திரைப்படங்களும் பல்வேறு பிரிவுகளில் கோரப்பட்டுள்ளன.
உலகில் பல முன்னணி திரைப்பட விழாக்கள் நடைபெற்றாலும், தமிழருக்கான திரைப்பட விழாக்கள் என்பது மிகவும் குறைவானதாகவே காணப்படுகின்றன.
இந்திய மற்றும் இலங்கைக்கு அப்பால், தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் இந்நிகழ்வு ஒழுங்குசெய்யப்படுவது மிகவும் சிறப்பானதாக கருதப்படுகின்றது.
கனடிய அரசு கனடாவில் வாழும் தமிழர்களை சகல வழிகளிலும் அவர்களது கலை, கலாச்சார நிகழ்வுகளை அங்கீகரித்து, அதற்க்கான சகல ஒத்துழைப்பை வழங்குவதோடு அரசு தலைவர்கள் வரை தமது பங்களிப்பினை சிறப்பாக செய்துவருகின்றார்கள்.

எனவே, கனடாவில் நடைபெறும் இவ் திரைப்பட விழா, உலக தமிழ் திரைப்படங்களுக்கும், கலைஞர்களுக்கும் மிகப்பெரும் அங்கீகாரமாக அமையும் என்பது உண்மை.
[அத்துடன் உலகில் நடக்கும் மிகவும் பெரிய திரைப்பட விழா என அறியப்பட்ட Toronto International (TIFF) திரைப்பட விழாவும் இந்த வாரத்திலேயே நடைபெறவுள்ளதால், ரொரான்ரோ வரும் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், இந்த இரண்டு விழாக்களிலும் பங்குபற்றக்கூடிய வாய்ப்பாக இந்த திகதிகள் அமைகின்றன.]
பல்லாயிரம் தமிழ் திரைப்படங்கள், குறும்படங்கள் என்பன வெளிவருகின்ற போதிலும், அத்திரைப்படங்கள் தமிழ் அல்லாத திரைப்பட விழாக்களிலேயே சமர்ப்பிக்கப்பட்டு அங்கீகாரத்தை வேண்டி நிற்கும் நிலையே இதுவரை காலமும் தமிழ் திரை கலைஞர்களுக்கும், திரைப்படங்களுக்கும் உள்ள நிலை.
நிச்சயமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இக்குறையை நிவர்த்திசெய்யும்.
தமிழ் திரைப்படங்களையும், அதன் பின்னால் உள்ள கலைஞர்களையும் ஊக்கப்படுத்தி, பாராட்டி, மகிழ்ந்து கொண்டாட ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா வரும் செப்டம்பர் 2020 ரொரான்ரோவில் நடைபெறவுள்ளது.
உலகத் தமிழர்களுக்கான தனித்துவமான திரை அடையாளமாக, திரைக்களமாக, பல்வேறு வகையான தமிழ்த் திரைப்படங்கள், குறும் படங்கள், ஆவணப்படங்கள், இசை ஆல்பங்கள் என வெவ்வேறு பிரிவுகளின் கீழே போட்டியிட்டு தகுதியுடையவர்கள் “விருதினையும், பரிசில்களையும், அங்கீகாரங்களையும்” பெற்றுக்கொள்வார்கள்.
உலகம் முழுவதும் வாழ்கின்ற திரை மற்றும் கலைஞர்களுக்கான மிகப் பெரிய திரையிடல், பயிட்சி, பட தயாரிப்பு உதவி களமாக ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா அமையும்.
பல்வேறு பிரிவுகளில் திரையிடல் மற்றும் போட்டிக்குத் தெரிவாகும் திரைப்படப் போட்டிகளுக்கான விண்ணப்ப அழைப்பிதழ் :
January 05. 2020 தொடங்கி விண்ணப்ப முடிவுத் திகதி : May 31, 2020 நிறைவுபெறும்.
ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழாவின்(2020) போட்டிகளுக்கான பிரிவுகள் :
முழுநீளப் படங்கள்
குறும்படங்கள்
காணொளிகள்
ஆவணப்படங்கள்
இசை ஆல்பங்கள்
அனிமேஷன் படங்கள்
Feature Film
Long Short (All Genres)
Short (All Genres)
International Short Films
Documentary
Photography
Web Series
Animation
Music Video/Album
Advertisement
Social Media Tiny Film
உங்கள் படைப்புகளை காலக்கிரமத்தில் கீழே உள்ள இணைப்பினூடாக அனுப்பி வையுங்கள்!
https://filmfreeway.com/ttiff/
ரொரான்ரோ தமிழ் திரைப்பட விழா இணையத்தளம்
http://www.ttff.ca

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

'ஆட்டொகிராப்' கோமகன் குழு வினருக்கு உலக தமிழர்களின் உதவி

'ஆட்டொகிராப்' கோமகன் குழு வினருக்கு உலக தமிழர்களின் உதவி...

என். லட்சுமிநாராயணன்- துணிந்து நில் .. தொடர்ந்து செல் !-- வளைகுடா சாதனை தமிழர் !

என். லட்சுமிநாராயணன்- துணிந்து நில் .. தொடர்ந்து செல் !-- வளைகுடா சாதனை தமிழர் !...

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணையம் வழியாக நடத்திய விகடகவி 2.0 எனும் லாக்டவுன் கலாட்டா

ஜெத்தா முத்தமிழ்ச் சங்கம் இணையம் வழியாக நடத்திய விகடகவி 2.0 எனும் லாக்டவுன் கலாட்ட...

நினைவுகள் நிரந்தரம்-என் தந்தை

நினைவுகள் நிரந்தரம்-என் தந்தை ...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us