சியாட்டில் தமிழர் கலை விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சியாட்டில் தமிழர் கலை விழா

பிப்ரவரி 10,2020  IST

Comments

தமிழர் தங்கள் நாடு விட்டு எங்கு சென்றாலும் தங்கள் நாகரிகம் - பண்பாடு - கலாச்சாரம் - கலைகளை வழுவாமல் மரபு மாறாது பின்பற்றி வளர்த்து - வாழ வைத்து வருகிறார்கள் என்பதற்கு சியாட்டில் பிப்ரவரி முதல் தேதி நடைபெற்ற தமிழர் கலை விழா ஒரு சிறந்த எடுத்துக் காட்டாகும். சியாட்டில்வாழ் தமிழர் சுமார் 270 குடும்பங்கள் ஒன்றிணைந்து பறையாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், சிலம்பாட்டம், வில்லுப்பாட்டு, பரதம் எனக் கோலாகலமாகத் தமிழர் கலை விழாவை நடத்தி அசத்தினர். 

தமிழர்தம் வீரக் கலையான சிலம்பாட்டமும் கரகாட்டமும் மெய்சிலிர்க்க வைத்தன. பட்டதாரிப் பெண் தாம்பாளத்தில் கும்பத்தில் ஒற்றைக் காலில் கரகமாடியது கண்கொள்ளாக் காட்சியாகும். இளைய தலைமுறையினர் கம்பெடுத்தும் வாளெடுத்தும் சுழன்றாடி மகிழ்வித்து வீரத்தை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வுகள் தமிழர்தம் பாரம்பரிய நாட்டுப் புறக் கலைகள் வாழவும் வளரவும் வழிவகுத்தன எனலாம். சுருங்கக் கூறின் தமிழகத்தில் இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தின.


- தினமலர் வாசகர் சிவகுமார்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us