'தமிழ் மண்ணின் காதல்' அமெரிக்காவில்-சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

'தமிழ் மண்ணின் காதல்' அமெரிக்காவில்-சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கப் பொங்கல் விழா

பிப்ரவரி 16,2020  IST

Comments

 சில மணித்துளிகள் நாம் இருப்பது அமெரிக்க மண்ணா,தமிழ் மண்ணா? எனக் காண்போரை திக்குமுக்காட வைத்தது டெக்சாஸ் சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் நடத்திய 2020 பொங்கல் விழா! ஏனென்றால் நம் தமிழ் மண்ணின் பறையிசையும் பரதமும், அதன் தாளத்திற்கேற்ற நளினமான நடனமும், கைச்சிலம்பமும், சிலம்பாட்டமும், நையாண்டி இசையும், ஐயனார் பாடல்களும், கும்மியும்,,அடடா! இப்போது சொல்லுங்கள்,இங்கு பிறந்து வளர்ந்த குழந்தைகள் முதல் பலரும் இதுவரைக் கேட்காத இத்தகைய அரும்பெரும் கலைகளை ஒருசேர காண்கையில் இது அமெரிக்காவா? நம் கிராமமா? எனத் தோன்றிய வியப்பில் ஒரு ஆச்சரியமுமில்லை!

சான் ஆண்டோனியோவிலுள்ள சிறந்த நடனக்கலைஞர்களை தேர்ந்தெடுத்து பறையிசைக்கு ஏற்ப பார்த்தவர்கள் ரசிக்கும் வண்ணம் அழகான நடன அசைவுகள் சொல்லிக்கொடுத்து பார்ப்போரைக் கட்டிப்போட்ட பெருமை மோகன் தாமோதரனுக்கே போய் சேரும்!அதே போல் இங்கு புகழ் பெற்ற 'கலாலயா' பரதநாட்டியப் பள்ளியிலிருந்து கௌசி சுப்ரமணியம், தன் மாணவிகளை பயிற்றுவித்து பறையுடன் பரதத்தைக் கலந்து அசத்தினார்!இத்துடன் இங்குள்ள தமிழ்ப்பள்ளி சிறப்பான நிகழ்ச்சி அளித்தது. மற்றும் பரதம் முதல் பலவகை நடனங்கள், மிகுந்த சிரத்தை எடுத்து பொருட்செலவும், நேரச்செலவும் செய்தது நம் கண் முன்னே தெரிந்தது. 

பல குழந்தைகளின் ஸ்டைலான நடனங்கள், மயிலாட்டம்,சிலம்பம் என பெரியவர்கள் மத்தியில் நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என நிரூபித்தனர்! நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் சிறப்பாக தொகுத்தளித்தனர்.சிறப்பு நிகழ்ச்சிகளை அளித்த செயின்ட் லூயிஸிலிருந்தும்,அட்லாண்டாவிலிருந்தும் வந்திருந்த 'அமெரிக்கப் பறை அணியினர்,அதன் கிளையான 'முழங்கு பறையினர் மற்றும் டாலஸிலிருந்து வந்திருந்த பிரவீணா வரதராஜன்- பிரியதர்சினி கருணாநிதியின் 'சிலம்பம் மார்சியல் ஆர்ட்ஸ்' குழுவில் பயின்றவர்கள் சிலர், டாலஸ் மெட்ரோப்ளெஸ் தமிழ்ச் சங்கத்தின் துணைத்தலைவர் வெற்றி சுழற்றிய 'சுருள் வாள்'! எங்கள் அனைவரையும் கட்டிப்போட்டு அசத்திய அனைவருக்கும் மிக்க நன்றிகளும் பாராட்டுகளும் !

வீடியோ கிராபர் மோகனசுந்தரம் நாகராஜன் விகடன் டிவி, புதியதலைமுறை, விகடகவி, மற்றும் அமெரிக்க சேனல்கள் சிலவற்றிற்கும் மிகநல்ல பதிவுகளை எடுத்துக்கொடுத்தார். புகைப்படங்கள் எடுத்தளித்தவர்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள்! வந்த அத்தனை பெண்களுக்கும் மல்லிகைப்பூவும்,ஹேர்பின்னும் அளித்தனர் பன்னீர் தெளித்து வரவேற்ற பெண்கள்! ஆடைகள் மற்றும் ஸ்நாக்ஸ் ஸ்டால்கள் போடப்பட்டிருந்தன. உறுப்பினர்களுக்கு தமிழ் காலண்டர்,கரும்பு மற்றும் டீ.ஷர்ட்கள் வழங்கினர்.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் காபி, டீ மற்றும் பக்கோடா சிற்றுண்டியாக வழங்கியும், நிகழ்ச்சி முடிந்த பின் 'தலைவாழை இலை' போட்டு விருந்தளித்த தமிழ்ச் சங்கத்திற்கு மக்கள் ஒரு 'ஓ' போட்டார்கள் என்றே சொல்லவேண்டும்! இரவு விருந்து 'மதுரை மெஸ்'ஸிலிருந்து வரவழைக்கப்பட்டன.அவரவர் வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்தாலும் இப்படி ஓர் அட்டகாசமான,ஜனரஞ்சகமான விழா நடைபெற எப்படி ஒரு திட்டமிடல் வேண்டும்! அத்தனையும் தலைவர் கார்த்திகேயன் தலைமையில் உறுப்பினர்கள் ஆளுக்கொரு துறையை எடுத்துக்கொண்டு முழுமனதோடு ஒத்துழைத்ததால் மட்டுமே இம்மாபெரும் வெற்றியை எட்ட முடிந்தது. 

இவ்வேளையில் தன்னார்வல நண்பர்களை சொல்லியே ஆகவேண்டும். தன் வீட்டு வேலை போல் சங்க உறுப்பினர்களோடு இணைந்து தொண்டாற்றியது பாராட்டத்தக்கது. அனைவருக்கும் தினமலர் சார்பாக வாழ்த்துக்கள்!இப்பொங்கல் விழா, வெளியிலிருந்து வந்து நிகழ்ச்சிகள் வழங்கியவர்களால் 'கிளாஸ்' என்றும் 'தரம்' என்றும் ஒற்றை வார்த்தைகளால் பாராட்டுப்பெற்றது குறிப்பிடத் தக்கது


https://youtu.be/c3d0VjDsTp4

- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us