நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொங்கல் கிராமியத் திருவிழா | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் பொங்கல் கிராமியத் திருவிழா

பிப்ரவரி 12,2020  IST

Comments

நியூசெர்சி தமிழ்ப் பேரவையின்  பொங்கல் கிராமியத் திருவிழா, நியூசெர்சி மாநிலத்தில் உள்ள மில்ஸ்டோன் நகரில் நடைபெற்றது. தமிழகக் கிராமியத்தைப் பிரதிபலிக்கும் திருவிழாவாக, தமிழ்ப் பண்பாட்டுக் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்த விழாவில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் சுமார் 1000 தமிழர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு நிகழ்ச்சியாக கலைமாமணி டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தோரணமும், கோலமும், கரும்பு, பொங்கல் பானை கூடிய அலங்காரத்துடன் மில்ஸ்டோன் நகரப் பள்ளியில் களை கட்டியது.


மதியம் வாழையிலை விருந்துடன் பொங்கல் கிராமியத் திருவிழா தொடங்கியது. சுமார் 500க்கும் மேற்பட்ட தமிழர்கள் கலந்து கொண்ட இந்த வாழையிலை விருந்து தமிழக உணவுத் திருவிழாவாக நடைபெற்றது. தொடர்ந்து பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், முளைப்பாரி ஊர்வலமும் நடைபெற்றன. பறையொலி முழங்க ஆண்களும், பெண்களும் இந்த முளைப்பாரி ஊர்வலத்தில் கலந்துக் கொண்டனர். ஊர்வலத்தின் இறுதியில் ஆண்களும், பெண்களும் கலந்து கொண்ட கும்மி நடனமும் மேலும் விழாவை மேலும் மெருகூட்டியது.

முக்கிய நிகழ்ச்சியாகக் கிராமியக் கலைநிகழ்ச்சிகள் மதியம் 2:30மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கின. நியூசெர்சி குழந்தைகளும், பெரியவர்களும் இந்தக் கலைநிகழ்ச்சிகளில் கிராமியப் பாடல்களைப் பாடியும், ஆடியும் பொங்கல் கொண்டாட்டத்தின் குதூகலத்தை மேடையில் வெளிப்படுத்தினர். பேரவை பறையிசைக் குழுவின் பறையிசையும், சிலப்பதிகாரம் வரலாற்று நாடகமும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தது. தமிழகத்தில் இருந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களை நியூசெர்சி தமிழ்ப் பேரவையின் தலைவர் திரு.சசிகுமார் ரெங்கநாதன் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து தமிழிசைக்கு டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் செய்த அரும்பணியைப் பாராட்டி பேரவை சார்பில் ஒரு சிறப்பு விருது பேரவைத் தலைவரால் வழங்கப்பட்டது.

தொடர்ந்து, விழாவின் முத்தாய்ப்பாக,கலைமாமணி டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ் இலக்கியங்களில் உள்ள அழகான பாடல்களை தன் காந்தக்குரலால் டாக்டர் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் பாடியது அரங்கில் எதிரொலித்தது. விழாவில் கலந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்திய குழந்தைகளுக்கு அவர்களை மேலும் ஊக்கப்படுத்தும் விதமாகப் பதக்கங்கள் அளிக்கப்பட்டன. சிறுகதைப் போட்டியில் வென்ற இருவருக்குப் பரிசுகள் அளிக்கப்பட்டன. இறுதியாக நியூசெர்சி தமிழ்ப் பேரவை துணைத் தலைவர் திருமதி.சாந்தி தங்கராஜ் அனைவருக்கும் நன்றி கூற விழா இனிதே நிறைவுற்றது.




- தினமலர் வாசகர் தனா


Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us