சிங்கப்பூர் கதைக்களம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

சிங்கப்பூர் கதைக்களம்

பிப்ரவரி 13,2020  IST

Comments

சிங்கப்பூர்த் தமிழ் எழுத்தாளர் கழகம், பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து மாதந்தோறும் நடத்தும் கதைக்களம், தமிழ் ஆர்வலர்கள் கலந்துகொண்ட நிகழ்வாக சிறப்பாக நடைபெற்றது. இது பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவுடன் இணைந்து பெக் கியோ சமூக மன்றத்தில் நடக்கும் இறுதி நிகழ்வு என்பதால் ஒரு நெகிழ்ச்சியான நிகழ்ச்சியாகவும் அமைந்தது.

முதல் அங்கமாக ஆங்கர் கிரீன் தொடக்கப் பள்ளி, தொடக்கநிலை மூன்று படிக்கும் சனா கான் அழகாக ஒரு நீதிக் கதையை ஏற்ற இறக்கங்களோடு சிறப்பாகச் சொன்னார். பொதுப்பிரிவுப் போட்டிக்கு வந்த கதை ஒன்றினை வினுதா கந்தகுமார் மற்றும் கதை விமர்சனம் ஒன்றை தமிழ்ச்செல்வி வாசித்தனர்.சிங்கை உள்ளூர் எழுத்தாளர் அங்கத்தில், எழுத்தாளர், எழுத்தாளர் கழக மதியுரைஞர் முனைவர் சுப திண்ணப்பனின் எழுத்துப்பணி பற்றியும், அவரின் சாதனைகளையும், அவருக்கு வழங்கப்பட்ட விருதுகளையும் பற்றி மோனலிசா சிறப்பாக விவரித்தார். இந்த அங்கத்தை மலையரசி வழிநடத்தினார். 

நமது உள்ளூர் வளரும் எழுத்தாளர் மணிமாலா மதியழகனின் இரண்டாவது நூல் 'இவள்...?' அறிமுகம் கண்டது. அந்தச் சிறுகதை தொகுப்பு நூல் பற்றி சிங்கை எழுத்தாளர் சித்துராஜ் பொன்ராஜின் விரிவான கருத்துரை காணொளி திரையிடப்பட்டது. அனைத்து சிறுகதைகளும் சிங்கப்பூர்ச் சூழலில் அமைந்திருந்ததைச் சொல்லி, அடுக்கு வீட்டு வாழ்வியலை ஒட்டி அமைந்த 2 கதைகளின் செம்மையை விரித்துரைத்தார். சி.த.எ.க துணைத்தலைவர் நா.ஆண்டியப்பன் புத்தகத்தை வெளியிட ஆனந்தபவன் உரிமையாளர் பானுமதி ராமச்சந்திரா முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.

சிறப்புப் பேச்சாளராக முனைவர் இரத்தின வேங்கடேசன் 'வாசக சாலை” என்ற தலைப்பில் வளரும் எழுத்துதாளர்களுக்கு வாசிப்பின் முக்கியத்துவத்தைப் பல்வேறு மேற்கோள்களோடு மிகச் சிறப்பாக எடுத்தியம்பினார்.கழகத்தின் தலைவர் சுப. அருணாச்சலம் அடுத்து வரும் சிறுகதைப் பயிலரங்கு பற்றியும், முத்தமிழ் விழா பற்றியும் சொல்லி அடுத்த மாதம் முதல் விக்ட்டோரியா சாலையில் உள்ள தேசிய நூலகத்தில் கதைக்களம் நடைபெறும் என்று அறிவித்தார். பெக் கியோ சமூக மன்றத்தில் மாதந்தோறும் கதைக்களம் நடைபெற உறுதுணையாக இருந்த பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவிற்கு நன்றியையும் தெரிவித்துக்கொண்டார்.

பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவின் மேனாள் மற்றும் இன்னாள் தலைவர்களான ஹாஜா முஹைதீன் மற்றும் ஜெகதீஷ், சி.த.எ.கழகத்தோடு இணைந்து பணியாற்றிய நிகழ்வுகளை நினைவு கூர்ந்ததோடு வருங்கால நிகழ்வுகளில் கைகோர்க்க என்றும் தயாராய் இருப்பதாய் உறுதியளித்தார்கள்.கழகத் துணைத்தலைவர் நா ஆண்டியப்பன் தனது உரையில் கழகம் கடந்து வந்த பாதையைச் சுருங்கச் சொல்லி, பெக் கியோ சமூக மன்ற இந்திய நற்பணிச் செயற்குழுவோடு 17 ஆண்டுகளுக்கும் மேலாக வெற்றி நடைபோட்டதையும் நினைவுகூர்ந்தார்.

இம்மாத சிறுகதை போட்டிகளில் மாணவர் பிரிவில் செல்வன் அர்ஜுன் பரிசு பெற்றார். பொதுப்பிரிவுப் போட்டியில் சித்ரா தணிகைவேல் முதல் பரிசும், சியாம்குமார் இரண்டாவது பரிசும், மலையரசி சீனிவாசன் மூன்றாவது பரிசும் பெற்றனர். சிறந்த விமர்சனத்திற்கான முதல் பரிசு பிரபா தேவி, இரண்டாம் பரிசு மலையரசி சீனிவாசனுக்கும் கிடைத்தன. ஃபேஸ்புக் குழுவில் போட்டிச் சிறுகதைகளுக்கான சிறந்த கருத்தைப் பதிவு செய்த காசிநாதனுக்கு ராம.தியாகராஜன் புத்தகப் பரிசு வழங்கினார். கழக செயலவை உறுப்பினரும், கதைக்களப் பொறுப்பாளருமான பிரேமா மகாலிங்கம் நிகழ்வினை செவ்வனே வழிநடத்தினார். ஆனந்தபவன் சுவையான தேநீர் விருந்துக்கும் ஏற்பாடு செய்திருந்தது.


- தினமலர் வாசகர் சியாம்குமார்

Advertisement
மேலும் சிங்கப்பூர் செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்

குமாரி ஆரபியின் வாய்ப்பாட்டு அரங்கேற்றம்...

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு

ஜனவரி 20, 21, 22ல் இந்து சமயச் சொற்பொழிவு...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

Advertisement
Advertisement
Advertisement

பெண்ணுக்கு முத்தமிட்ட போப்

வாடிகன்: போப் பிரான்சிஸ் கடந்த சில நாட்களுக்கு முன் புத்தாண்டையொட்டி , வாடிகனில் பார்வையாளர்களை நோக்கி கையசைத்தபடி வந்த போது, பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து ...

ஜனவரி 09,2020  IST

Comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)