ஆஸ்டின் தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா- சான் ஆண்டோனியோ நடனக் கலைஞர்களின் பிரமாதமான பங்களிப்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஆஸ்டின் தமிழ் சங்கத்தில் பொங்கல் விழா- சான் ஆண்டோனியோ நடனக் கலைஞர்களின் பிரமாதமான பங்களிப்பு

பிப்ரவரி 14,2020  IST

Comments

டெக்சாஸ் மாநிலத்தின் தலைநகர் ஆஸ்டினில் உள்ள தமிழ்ச்சங்கம் கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி தமிழர்களின் திருநாள் பொங்கல் விழாவை கோலாகலமாய்க் கொண்டாடியுள்ளது. கிட்டத்தட்ட 200 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கலந்து கொண்டன. குழந்தைகளும் பெரியவர்களும் கலந்து கொண்ட 'கோலப்போட்டி' வைக்கப்பட்டு, அனைவருக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன. 

பின் சிறந்த பலவகை ஆடல்-பாடல்களுடன் கலைநிகழ்ச்சிகள் பாராட்டும் வண்ணம் அமைந்திருந்தன. பாரம்பரிய 'பறையிசை' மிகுந்த வரவேற்பைப்பெற்றது. அன்று நடந்த 'பட்டிமன்றம்' அனைவரும் ரசித்த ஒன்று! சான் ஆண்டோனியோவை சேர்ந்த 33 பேர் கொண்ட நடனக்குழு அங்கு சென்று ஓர் அட்டகாசமான நிகழ்ச்சியை அளித்து, அங்கு கூடியிருந்த அனைவரையும் பெரும் உற்சாகத்திற்கு உள்ளாகினர். அந்த அரங்கமே அதிரும் வண்ணம் கைதட்டல்களால் நிரம்பியது. அது தவிர ஆஸ்டின் தமிழ்ச்சங்க தலைவர் மற்றும் நிர்வாகக்குழு, இக்கலைஞர்கள் அனைவருக்கும் ஆடைகளில் டாலர்கள் செருகி கௌரவப்படுத்தினர். \

உள்ளூர் கலைஞர்கள் மட்டுமல்லாது வெளியூர் கலைஞர்களையும் ஆதரித்தது பாராட்டுக்குரியது! இம்மேடையில் தன்னார்வலர்கள் ரத்த தானம் மற்றும் உடல் உறுப்புகள் தானம் பற்றியும், இந்தியாவின் வறுமையால் வாடும்குழந்தைகளின் கல்விக்கு உதவ நிதிதிரட்டி வருவது போன்ற மிக போற்றத்தக்க செயல்கள் அனைவரும் அறியும்படி விளக்கப்பட்டது. சரியாய் நேரம் தொடங்கி சரியான நேரத்தில் விழாவினை முடித்து,பின் மக்கள் அனைவருக்கும் சிறந்த ஓர் பொங்கல் விருந்து அளித்தனர். 

எல்லோருக்கும் கரும்பும்,பொங்கல் இதழும் அளித்து மறக்கமுடியாத நிகழ்வாக்கினர் ஆஸ்டின் தமிழ்ச்சங்கத்தினர்!


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us