ஹூஸ்டன் நகர தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் காதலர் தினம் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

ஹூஸ்டன் நகர தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் காதலர் தினம்

பிப்ரவரி 19,2020  IST

Comments

 அமெரிக்கா, டெக்சாஸ் மாநிலத்தின் ஹூஸ்டன் மாநகரில் கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பில் கிளை தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் அன்னையர் தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டு அதன் மூலம் நிதி திரட்டி தமிழகத்தில் உள்ள திருவாரூர் மாவட்டம் அரசு பள்ளிகளில் ஏபிசி எனும் திட்டத்தின் மூலம் அரசுப் பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு நிதி உதவி அளிக்கப்பட்டு வருகிறது. 

கடந்த இரண்டு ஆண்டுகளாக அமெரிக்காவில் காதலர் தினம் பிப்ரவரி மாதம் ஹூஸ்டன் நகரில் தமிழ்நாடு அறக்கட்டளை சார்பாக மிக விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 80 வயது சதாபிஷேகம் முடித்த மூத்த தம்பதிகள் மற்றும் பிற மூத்த தலைவர்களை கவுரவித்து இந்த காதலர் தினம் கொண்டாடப்பட்டது அதுமட்டுமில்லாமல் இளைஞர்கள் ஆடல் பாடல்களுடன் இந்த நிகழ்ச்சி ஆரவாரமாக கொண்டாடப்பட்டது. 

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் காதலர் தினவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. பேச்சு, பாட்டு மற்றும் பலவித விளையாட்டுக்களை கொண்டு இந்த விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. அனைவரும் உடலுக்கு ஆரோக்கியமான உணவுகளை கொண்டு வந்து கலந்து சாப்பிட்டனர் மற்றும் 5 கே மரத்தான் போட்டியில் கலந்து கொண்டனர். தமிழ் பாடல்களை கணவனும் மனைவியும் காதல் ஜோடியாக சேர்ந்து பாடி மகிழ்ந்தனர். நீ பாதி நான் பாதி உண்ணும் போட்டியில் கலந்து கொண்டாடினர். 

ஏப்ரல் மாதம் 4 /  5 தேதியில் திருக்குறள் திருவிளையாட்டு மற்றும் மே மாதம் 3 ஆம் நாளில் அன்னையர் தின நிகழ்ச்சிக்காக நிதி திரட்டும் ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. அனைவரும் இந்நிகழ்ச்சிகள் மூலம் பங்கேற்று நம் தமிழகத்திற்கு நிதியளித்து நம் தமிழகத்தில் உள்ள குழந்தைகளை படிக்க உதவுமாறு தமிழக அறக்கட்டளை சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது. இறுதியில் தமிழ்நாடு அறக்கட்டளையின் ஹூஸ்டன் கிளை சார்பாக திருமதி மாலா கோபால், நளினி பாலச்சந்தர் மற்றும் புனிதா தங்கராஜ் நன்றியுரை நல்கினர்.


- தினமலர் வாசகர் தங்கராஜ் பேச்சியப்பன்




Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us