அல் அய்ன் இந்திய சமூக நல மையம் நடத்திய பொங்கல் விழா : இந்திய தூதரக அதிகாரி பங்கேற்பு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

அல் அய்ன் இந்திய சமூக நல மையம் நடத்திய பொங்கல் விழா : இந்திய தூதரக அதிகாரி பங்கேற்பு

பிப்ரவரி 19,2020  IST

Comments

அல் அய்ன்: அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் பொங்கல் விழா 14.02.2020 வெள்ளிக்கிழமை நடந்தது. அல் அய்ன் தமிழ்க் குடும்பம் அமைப்புடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த விழாவில் ஆட்டம், பாட்டம் என களைகட்டியது. இந்த விழாவுக்கு இந்திய சமூக நல மையத்தின் தலைவர் முபாரக் முஸ்தபா தலைமை வகித்தார். தொடக்கமாக அமீரக, இந்திய தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்டவை பாடப்பட்டது. அதன் பின்னர் குத்துவிளக்கு ஏற்றப்பட்டது. பொதுச்செயலாளர் ஐ.ஆர். முகைதீன் வரவேற்புரை நிகழ்த்தினார். 

இந்திய தூதரக அதிகாரி ராசமுருகன் பொங்கல் விழாவை தொடங்கி வைத்தார். அவர் தனது உரையில், 'அல் அய்ன் இந்திய சமூக நல மையத்தில் நடக்கும் பொங்கல் விழாவில் தமிழர்கள் உள்ளிட்ட இந்தியர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை சிறப்பாக இருந்தது. அமீரகத்துக்கும், இந்தியாவுக்கும் இருந்து வரும் சிறப்பான நல்லுறவு குறிப்பிடத்தக்கது' என்றார். 

அல் அய்ன் மாநகராட்சியின் முதலீட்டுத்துறை தலைவர் அகமது ஒம்ரான் அல் ஆமிரி கூறியதாவது: அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்களின் குறிப்பாக தமிழர்களின் பாரம்பரிய விழாவில் கலந்து கொண்டிருப்பது எனக்கு பெருமையளிக்கிறது. இந்தியர்கள் சட்டங்களை சிறப்பாக மதித்து நடப்பவர்கள். அமீரகம், இந்திய நட்புறவு சிறப்பாக இருந்து வருகிறது. இத்தகைய உறவு இன்னும் மேம்பட இதுபோன்ற பாரம்பரிய விழாக்கள் உதவியாக இருக்கும் என்றார். 

பொங்கல் விழாவின் போது பொங்கல் வைக்கும் நிகழ்வினை கேரள சட்டமன்ற உறுப்பினர் அப்துல் காதர் பார்வையிட்டார். அவர் தனது உரையில் தமிழ் சகோதரர்கள் ஒருங்கிணைந்து தங்களது பாரம்பரிய விழாவில் தானும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சியளிப்பதாக கூறினார். பொங்கலை இங்கு வைத்து அது பொங்கி வரும் நிகழ்விலும் கலந்து கொண்டிருப்பது தனக்கு பெருமகிழ்வை அளிக்கிறது என்றார். சிறப்பு விருந்தினர்கள் நினைவுப் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 

லூலூ குழுமத்தின் பிராந்திய இயக்குநர் சாஜி ஜமாலுதீன், ஆய்வுத்துறையில் முனைவர் பட்டம் பெற்ற கல்லிடைக்குறிச்சி ஏ.முகம்மது மைதீன், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்டோர் பொன்னாடை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர். உரி அடித்தல் உள்ளிட்ட பல்வேறு வகையான விளையாட்டு போட்டிகள், பெண்களுக்கான கோலப் போட்டி, குழந்தைகளுக்கான விளையாட்டு நிகழ்ச்சிகள் நடந்தன. இந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டனர். 

தன்முனைப்பு பயிற்சியாளர் ரவி சொக்கலிங்கம் சேவையின் அவசியம் குறித்து உரை நிகழ்த்தினார். தமிழகத்தின் சிவகெங்கை பகுதியைச் சேர்ந்த கருப்பசாமியின் பறையிசை அனைவரையும் வெகுவாக கவர்ந்தது. மியூசிக் இந்தியா ராகேஷ் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பொழுதுபோக்கு துறை செயலாளர் சாஜித் அரயால்தோப், பொருளாளர் சந்தோஷ், அல் அய்ன் தமிழ்க் குடும்ப தலைவர் வேல்முருகன், கன்வீனர் ராஜவேல் பொருளாளர் சலீம் உள்ளிட்ட குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர். இந்த விழாவில் அமீரகத் தமிழர்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.


- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us