துபாய் பெண்களை மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக புகார் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

துபாய் பெண்களை மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக புகார்

பிப்ரவரி 20,2020  IST

Comments (1)

துபாய்: துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு தங்க நகைகளை அணிந்து செல்லும் பெண்களைசுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது.

துபாயில் இருந்து மதுரை விமான நிலையத்துக்கு தனியார் நிறுவனம் ஒன்று நேரடி விமான சேவையை மேற்கொண்டு வருகிறது. இதனால் மதுரை, திருநெல்வேலி, திண்டுக்கல், இராமநாதபுரம், சிவகெங்கை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பொதுமக்கள் அந்த விமானத்தில் செல்ல அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.

துபாயில் இருந்து தங்க நகைகளை அணிந்து செல்லும் பெண்கள் அவர்கள் நீண்ட காலம் துபாய் நகரில் வசித்து இருந்தாலும் அவர்களை சோதனை என்ற பெயரில் சுங்கத்துறை அதிகாரிகள் மிரட்டி வருவதாக ஒரு சிலர் புகார் தெரிவித்துள்ளனர்.

கடந்த வாரம் துபாயில் இருந்து மதுரை சென்று திரும்பிய பயணி ஒருவர் தங்களது நகைகளை கணக்கிட்டு டூட்டி கட்ட வேண்டும் என கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பயணியிடம் லஞ்சமாக 500 திர்ஹாத்தை வாங்கி விட்டு அவரை வீட்டுக்கு செல்ல அனுமதித்துள்ளனர்.

இது குறித்து அவர் கூறியதாவது : இதுவரை தான் துபாயில் இருந்து திருவனந்தபுரம் விமான நிலையத்துக்கு மட்டுமே சென்று வந்தேன். கேரளாவில் அந்த விமான நிலையம் இருந்தாலும் இதுவரை தான் போட்டுச் சென்ற நகைகளை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தியதில்லை.ஆனால் அவசரமாக செல்ல வேண்டும் என்ற காரணத்தால் தமிழகத்தின் மதுரை விமான நிலையத்துக்கு செல்லலாம் என நினைத்தேன். தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் பலர் தமிழக விமான நிலையமான மதுரையில் சோதனை என்று கூறி மிகவும் துன்புறுத்தல் செய்வது மிகவும் வருத்தமளிக்கிறது.இதேபோல் மேலும் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து பெண்களை சோதனை என்ற பெயரில் துன்புறுத்தி வரும் மதுரை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் மீது தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.

- நமது செய்தியாளர் காஹிலா

Advertisement
மேலும் வளைகுடா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து (1)
Parthasarathy Badrinarayanan - jakarta,Indonesia
22-பிப்-202022:05:55 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan கடத்தல்காரர்களின் புலம்பலுக்கு செவி சாய்க்கக் கூடாது. சுங்கத்துறை தன் கடமையை செய்ய வேண்டும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us