மத்திய ஃபுளோரிடா தமிழ்ப்பள்ளியின் 'சங்கே முழங்கு' | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மத்திய ஃபுளோரிடா தமிழ்ப்பள்ளியின் 'சங்கே முழங்கு'

பிப்ரவரி 22,2020  IST

Comments

பல்லாயிரம் மைல்கள் கடந்து மிகச் சிறப்பாக முழங்கியது தமிழ்ச் சங்கு! 

மத்திய ஃபுளோரிடாவில் உள்ள தமிழ்ப்பள்ளியில் மூன்றாம் ஆண்டு 'சங்கே முழங்கு' நிகழ்ச்சி, கடந்த16 ஆம் தேதி, இங்குள்ள இந்துக்கோவில் வளாகத்திலுள்ள அரங்கத்தில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.மதியம் 2 மணிக்கு ஆரம்பித்து, இடைவேளை நேரம் ஒதுக்கி சுவையான சிற்றுண்டி வழங்கி மாலை 6 மணியளவில் இனிதே முடிந்தது. நிகழ்ச்சிகள் அனைத்தும் அத்தனை அருமை. இப்பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ,மாணவிகளும் கலந்துகொண்டனர். பங்கு கொண்ட குழந்தைகளுக்கும் பெற்றோருக்கும் மிகுந்த பாராட்டுக்கள்! 

நிகழ்ச்சியில் மாறுவேடப்போட்டி,வாங்க பேசலாம்,கதை சொல்லலாம்,உள்ளத்தொடர்பு,மௌனமொழி,நாடகம் மற்றும் ஓவியம் என அமர்களப்படுத்தினர். ஓவியம் தெரிந்த மாணவர்கள் 15 பேர் மேடையில் அனைவரின் முன்பு ஓர் ஓவியத்தை தலைகீழாக வரைய ஆரம்பித்து, வரையும் உருவம் யார் என்பதில் அவையில் இருந்த அனைவரையும் இருக்கையின் நுனியில் அமரும்படியான ஓர் இனிய பதட்டமான ஆர்வத்தைத் தூண்டினர்.தமிழ்க்கவிஞர் பாரதிதாசன் வரைபடத்தை அத்தனை அழகுற வரைந்து பெரும் கைதட்டல்களை அள்ளிச்சென்றனர் அம்மாணவர்கள்! 

பெற்றோர்கள்-பிள்ளைகள் சேர்ந்து விளையாடும் விளையாட்டின் மூலம் ஏற்படும் உறவுப்பாலம் பற்றிய நாடகம் சிறப்பாய் இருந்தது.இந்நல்ல நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், உணவு வழங்கியவர்கள், அரங்கத்தை அலங்கரித்தவர்கள், தன்னார்வலர்கள் என பல நல்ல உள்ளங்களே காரணம். வாழ்த்துக்கள்!


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us