மஞ்சளே வா வா! .........கொரோனாவே போ போ!! | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

மஞ்சளே வா வா! .........கொரோனாவே போ போ!!

மார்ச் 17,2020 

Comments

சனிக்கிழமை விடுமுறையும் பிராங்பேர்ட் காலநிலை 15 டிகிரியும் இணைந்து என்னை சீக்கிரம் எழும்ப விடாமல் படுக்கையில் புரள வைத்தது. இந்தியாவிலிருந்து நண்பர் வாட்சப் ல் போன் செய்தார். சுகம் விசாரித்து, ஜெர்மனியில் கரோனா நிலை என்ன? என்று ஆரம்பித்து சிறிது நேரம் அளவலாவல். உரையாடலுக்குப் பின், அவருடைய சீன நண்பர் அனுப்பிய புகைப்படத்தை எனக்கு அனுப்பினார். ஆச்சரியமாக இருந்தது.அது என்ன என்று தெரிந்துகொள்ள ஆவலா? கொஞ்சம் பொறுங்க!


1995ல் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் மஞ்சள் காப்புரிமை சம்பந்தமாக நடந்த வழக்கு அந்த சமயத்தில் மிகவும் பிரசித்தம். மஞ்சள், காயங்களை ஆற்றும் தன்மை கொண்டதைக் கண்டுபிடித்துள்ளதாக கூறி, அமெரிக்காவின் மிஸிப்பி மருத்துவ மைய பல்கலைக்கழகத்தில் இரண்டு அமெரிக்க வாழ் இந்தியர்கள் காப்புரிமை பெற்றனர். சற்று தாமதமாக முழித்துக்கொண்ட போதும் நம் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கழகம் துரிதமாக செயல் பட்டு, இது இந்தியர்களின் 'பழங்காலக் கலை' என்று கூறியதோடு மட்டுமல்லாமல் மஞ்சளின் காயங்களைக் குணப்படுத்தும் திறன் பழங்காலத்திற்கு முன்பே கண்டறியப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது என்பதற்கான ஆதாரங்களையும் உடனடியாக சமர்ப்பித்தது. சமர்ப்பித்த முக்கிய ஆதாரங்களில் ஒன்று 'இந்திய மருத்துவக் கழகம் 1953 - ல் வெளியிட்ட ஒரு சஞ்சிகை'. அதன் பிறகு தான் அமெரிக்க காப்புரிமை இரத்து செய்யப் பட்டது.

இப்போ அதெற்கென்ன என்கிறீர்களா? இந்த மஞ்சளில் தான் விஷயமே இருக்கிறது.மலிவான விலை என்ற 'மார்க்கெட் டேக்' உடன் உலக சந்தைக்குள் நுழைந்து, உணவை எடுத்து உண்ண பயன்படுத்தும் கரண்டி முதல் கம்ப்யூட்டர் வரை உலகின் மூலை முடுக்கு வரை எங்கும் வியாபித்திருப்பது சீனப் பொருட்கள் தான். கரோனாவினால் சற்று நிலை குலைந்துப் போயிருந்தாலும், இரண்டாம் உலகப்போரின் 'லிட்டில் பாய்' மற்றும் 'ஃபேட் மேன்' அணுகுண்டு வெடிப்புக்களுக்குப் பின், ஜப்பான் மிகப்பெரிய உத்வேகத்துடன் மீண்டது மாதிரி விரைவில் பீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்துகொண்டிருக்கிறது என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. அந்த சீனாவின் தயாரிப்புகள் நம் கடைகளை ஆக்கிரமித்துக்கொண்டிருக்க, நம்மூர் மஞ்சள் அங்கு இப்போது கொரோனாவை விரட்டும் பயில்வானாக சந்தைப்படுத்தப் பட்டுக்கொண்டிருக்கிறது. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? அது மட்டுமல்ல. நம்மூர் இரசமும் வைரஸை விரட்டும் என்பது போன்ற விளம்பரங்கள் அங்கு கடைகளில் எங்கு திரும்பினும் காட்சியளிக்கின்றன.


கி.பி 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த பிரிட்டிஷ் எழுத்தாளர் ஆர்தர் ராபர்ட் கென்னி -ஹெர்பர்ட் தன்னுடைய கல்லினரி ஜோட்டிங்ஸ் புத்தகத்தில் இரசம் பற்றி குறிப்பிடுள்ளார். 'மிளகுத்தண்ணி'  என்றே ஆங்கிலத்திலும் அதன் பெயரைக் குறிப்பிடுகிறார். இரசம் செய்ய தேவையான பொருட்களை மிகவும் துல்லியமாக அளவுகளுடன் குறிப்பிடத்தோடு மட்டுமல்லாமல் எப்படி செய்வது என்பதையும் அந்த புத்தகத்தில் விளக்கியுள்ளார்.அதைப் படிக்கும் போதே மிகவும் பெருமையாக இருக்கிறது. நம்மை ஆண்டவர்கள் நாவை நம் கண்டுபிடிப்பு கட்டிபோடுகிறது என்பது சந்தோஷமான விஷயம் தானே. இரசத்திற்குப் முழுமூலமாய் இருக்கும் மிளகு பற்றி சங்க இலக்கியம் பின்வருமாறு கூறுகிறது.


'யவனர் நன்கலம் தந்த தண்கமழ் தேறல்பொன் செய் புனைகலத்து ஏந்தி நாளும்ஒண்தொடி மகளிர் மடுப்ப மகிழ்சிறந்துஆங்க இனிது ஒழுகுமதி'

யவனர் என்று அழைக்கப்படும் கிரேக்கர், ரோமானியர், எகிப்தியர், பாரசீகர் மற்றும் அராபியர்கள், பொன்மூட்டைகளைக் கொடுத்து, தமிழர்களிடம் மிளகை (கறி) வாங்கிச்சென்றதாக அந்த பாடல் தெரிவிக்கிறது.
மொத்தத்தில் உலகை மிரட்டும் கொரோனா வைரஸை விரட்டும் விஷயத்தில் நம்மூர் மஞ்சளும் இரசமும் பெரும் பங்கு வகிக்கின்றன என்பதை பார்க்கும் போது உண்மையிலேயே சந்தோசம் தான். உங்களுக்கும் தானே!


- நமது செய்தியாளர் ஜேசு ஞானராஜ்

Advertisement
மேலும் ஐரோப்பா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020

மல்லிகை மலர் ( காலாண்டு இதழ்)- ஏப்ரல், 2020...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us