தனாகா பூசு தமிழ் பேசு | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தனாகா பூசு தமிழ் பேசு

மார்ச் 19,2020  IST

Comments

தனாகா பூசினால் முகம் குளிர்ச்சியாகும் தமிழ் பேசினால் வாழ்க்கை மகிழ்ச்சியாகும். மியன்மார் பிள்ளைகளிடம் தமிழ் பேசும் ஆர்வத்தை வளர்க்க தனாகா பூசு தமிழ் பேசு என்னும் முழக்க வரியோடு தமிழ் இல்லம் திருக்குறள் பேரவை, தங்கராசன் அறக்கட்டளை, ஜெ. மஹா அப்பாவு அறக்கட்டளை ஆகிய மூன்று அமைப்பினரும் முத்தமிழாய் ஒன்றிணைந்து மியன்மார் நாட்டின் கரீன், மூன் மாநிலங்களில் இயங்கும் தமிழ்ப் பாடசாலைகளைப் பார்வையிட்டனர். மாணவச் செல்வங்களிடம் தமிழ் மொழியின் பெருமைகளை விளக்கி அவர்களிடம் தமிழ் பேசும் ஆர்வத்தை வளர்த்தனர். 

மாணவர்களும் தனாகா பூசு தமிழ் பேசு எனும் முழக்க வரியை உணர்ச்சி மேலிட ஒருசேர முழங்கி தமிழ் உணர்வுக்கு கலகலப்பூட்டினர். உள்ளூர்ப் பிரமுகர்களும் ஆசிரியப் பெருந்தகைகளும் மாணவக் கண்மணிகளும் தங்கராசன் அறக்கட்டளை நிறுவனர் மணிவாசகத்தை தமிழ் மாமா என்றும் ஜெ. மஹா அறக்கட்டளை நிறுவனர் அப்பாவு அவர்களை தமிழ்த் தாத்தா என்றும் அழைத்து மகிழ்ந்தனர். இருவரும் கட்டுமானப் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கும் சில பள்ளிகளுக்கு நன்கொடை வழங்கியதோடு பிள்ளைகளுக்கும் நோட்டுப் புத்தகங்கள், எழுது கோல்கள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியில் திளைத்தனர். தமிழ் மாமா ஒருபடி மேலே போய் மாணவர்களுக்கு போட்டிகள் வைத்து பணப்பரிசு தந்து அவர்களை ஊக்குவித்து மகிழ்ந்தார். 

சென்ற இடமெல்லாம் சிரித்த முகத்தோடு வணக்கம் சொல்லி வரவேற்ற பிள்ளைகள் நீங்காத நினைவுகளாய் நெஞ்சில் நிறைந்தது அருமை அழகு அற்புதம். மியன்மாரில் தமிழ் ஆர்வலர்களும் சேவை மனப்பான்மை கொண்ட செல்வந்தர்களும் இணைந்து தமிழ்ப் பாடசாலைகளை அமைத்து தமிழ்ப் பிள்ளைகளுக்கு தமிழ்மொழி கற்பித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


- தினமலர் வாசகர் வெங்கடேஸ்வரன்

Advertisement
மேலும் தென் கிழக்கு ஆசியா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us