தமிழ்ச் சங்கம் நடத்திய 'கொரோனா' குறித்த மருத்துவ கலந்துரையாடல் | NRI | NRI latest news | NRI updated news | NRI tamil news ::

தமிழ்ச் சங்கம் நடத்திய 'கொரோனா' குறித்த மருத்துவ கலந்துரையாடல்

மார்ச் 22,2020  IST

Comments

உலகமெங்கும் விரும்பாவிடினும்,தவிக்க முடியாது உச்சரிக்கும் ஓர் வார்த்தை-'கொரோனா'. அதனை ஒட்டி நிறைய தகவல்கள் நம்மை வந்து அடைந்தாலும் குழப்பத்தையே விளைவிப்பதாக இருந்துகொண்டிருக்கிறது. இதனைப் போக்க, நம் மனதில் கேட்க நினைக்கும் அனைத்து கேள்விகளுக்கும் விடை கிடைக்க மார்ச் 19 ஆம் தேதி, சான் ஆண்டோனியோ தமிழ்ச் சங்கம் ஓர் மருத்துவ கலந்துரையாடல் ஏற்பாடு செய்திருந்தது.இங்குள்ள அனைவருக்கும் நட்புடனும், மிக பக்கபலமாகவும், பரிச்சியமாகவும் இருக்கும் டாக்டர்.வெங்கட் ஸ்ரீனிவாசனுடன் நான் நம் மக்கள் சார்பாக கலந்துரையாடினேன். 

கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் முகப்புத்தகத்தில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதில் தலைவர் கார்த்திகேயன்,துணைத் தலைவர் குமார்,செயலாளர் செல்வகிரி மற்றும் வெங்கட்ரமணன் கலந்து கொண்டனர். அதிக நபர்கள் சந்திப்பதை இச்சமயத்தில் தவிர்க்கவே இத்தகைய ஏற்பாடு. இதனால் வீட்டில் இருந்த படியே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் சந்தேகத்தை கேட்டு தெரிந்து கொண்டனர். இச்சந்திப்பு அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக மக்கள் உணர்ந்தனர். 

நமக்காக நேரடியாக ஆபத்துக் களத்தில் சேவை செய்யும் உலகில் உள்ள அனைத்து மருத்துவர்களுக்கும், செவிலியர்களுக்கும், மருத்துவமனையில் பணிபுரியும் ஒவ்வொரு சகோதர சகோதரிகளுக்கும் எங்கள் அனைவரது மனமார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும் உரித்தாகுக!


- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்

Advertisement
மேலும் அமெரிக்கா செய்திகள்

மேலும் செய்திகள் உங்களுக்காக ...

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி

மார்ச் 22ல் திருக்குறள் ஒப்புவித்தல்; பேச்சுப்போட்டி...

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா

செப்., 11ல் டொரண்டோ தமிழ் சர்வதேச திரைப்பட விழா...

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி

ஜனவரி 18 முதல் 'தம்ஸி ஆர்ட்' ஓவிய பள்ளி சார்பில் 'கோல்டன்ஸ்ட்ரீக்' ஓவிய கண்காட்சி...

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா

ஜனவரி 17ல் பொங்கல் திருவிழா...

Advertisement
Advertisement
Advertisement

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world ( Ulaga Tamilargal Seithikal - NRI ). Designed and Hosted by Dinamalar | Contact us